Never Drink Tea In Empty Stomach : பலருக்கு காலையில் எழுந்தவுடன் பல் துளக்குகிறோமோ இல்லையோ, டீ குடிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். அப்படி குடித்தால்தான் அவர்களுக்கு அன்றைய நாளே ஓடியது போல இருக்கும். ஆனால், இது உங்கள் உடலில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உங்களுக்கு அசிடிட்டி பாதிப்பு ஏற்படலாம். கஃபைன் மற்றும் டானின்கள் ஆகியவை வயிற்றெரிச்சலையும் ஏற்படுத்தலாம். வயிறு உப்பசம் ஆவது, அசௌகரியம் ஏற்படுத்துவது, ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். பலர், காலையில் டீ குடிப்பதால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இது தவறான புரிதல். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
குமட்டல்:
காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், குமட்டல் ஏற்படலாம். வயிற்றில் வேறு எதுவும் இல்லாமல், டீ குடிப்பது அமிலத்தன்மையை அதிகரிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் முதலில் தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் சாப்பிட்டுவிட்டு பின்னர் அதை சாப்பிடலாம்.
மலச்சிக்கல்:
டீயில் theophylline என்ற கெமிக்கல் கலக்கப்படுகிறது. இது, செரிமான பிரச்சனை ஏற்படலாம். இதனால், சாப்பிட உணவுகள் சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் ஏற்படலாம்.
நீர்ச்சத்து குறைவு:
அடிக்கடி அதிகமாக டீ குடிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக வெயில் காலங்களில் நாம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அந்த சமயத்தில், நாம் நிறைய டீ குடிப்பதால் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகலாம்.
தூக்கம் கெட்டுப்போவது:
டீயில், பிளாக் டீ நம் தூக்கத்தை கெட்டுப்போக செய்யலாம். குறிப்பாக கஃபைன் அதிகமாக இருக்கும் டீ பானங்களை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலையில் டீ குடிப்பதையும், இரவில் டீ குடிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இரவில் 7-8 மணி நேரம் நிம்மதியாக உறங்குபவர்களில் பெரும்பாலானோர் டீ குடிக்கும் பழக்கமற்றவர்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயிற்று பிரச்சனை:
வெறும் வயிற்றில் டீ குடிப்பது, வயிற்று பிரச்சனைகளை கிளப்பி விடலாம். பசியின்மை, எப்போதும் எடுக்கும் சாப்பாட்டு அளவை விட குறைய வாய்ப்புள்ளது.
இரும்புச்சத்து:
டீத்தூளில் இருக்கும் டாண்டனிஸ் இருக்கிறது. இது, உடல் உணவிலிருந்து உறிஞ்சுக்கொள்ளும் இரும்பு சத்துகளை ஏற்றுக்கொள்ள செய்யாமல் போகச்செய்யலாம். அனிமியா, இரும்புச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
பற்கறைகள்:
காலையில் அல்லது, அதிகமாக டீ குடிப்பது பற்கறைகளை உருவாக்கலாம். குறிப்பாக பிளாக் டீ, பால் கலந்த டீ கறைகளை ஏற்படுத்தலாம். இந்த கறைகள், அப்படியே நிரந்தரமானதாக மாறலாம்.
காஃபின் உணர்திறன்:
சிலர் காஃபினுக்கு அதிக உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். இது பதட்டம், நடுக்கம், அதிகரித்த இதயத் துடிப்பு அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் காஃபினுக்கு உணர்திறன் உடையவராக இருந்தால், காலையில் தேநீர் குடிப்பது இந்த பிரச்சினைகளை மோசமாக்கும். குறிப்பாக நீங்கள் அதை வெறும் வயிற்றில் குடித்தால் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.