உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில அரசு மும்முரமாக செயல் பட்டு வருகிறது.
உ.பி-யில் படாவுன் நகரத்தை ஒட்டியுள்ள துக்ரைய்யா கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. கிராம மக்கள் அம்பேத்கர் சிலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று படாவுன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
இந்நிலையில், சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று ஆக்ராவிலிருந்து துக்ரைய்யா கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிலையைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் நீல நிறமாக இருந்த அம்பேத்கரின் சிலை முழுவதும் காவி நிறத்தில் இருந்தது. கழுத்திலும் காவி நிற மாலை போடப்பட்டிருந்தது.
அம்பேத்கர் இயக்கங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹேமந்த்ரா கவுதம், காவி நிறத்தை அழிக்க முடிவு செய்தார். அதன்படி இன்று நீல நிற பெயின்ட் அடிக்கப்பட்டு சிலை மாற்றப்பட்டது.
#WATCH: BSP leader Himendra Gautam, who repainted BR Ambedkar's statue from saffron to blue in Badaun, evades ANI reporter's question 'When the villagers had no objection to the colour of the statue, why was it re-painted to blue? You had earlier said Gautam Buddha wore saffron.' pic.twitter.com/CSHsjmC4cQ
— ANI UP (@ANINewsUP) April 10, 2018
#WATCH Badaun: The damaged statue of BR Ambedkar which was rebuilt and painted saffron, re-painted blue by BSP Leader Himendra Gautam. pic.twitter.com/Tntf7shNAN
— ANI UP (@ANINewsUP) April 10, 2018
Badaun: The damaged statue of BR Ambedkar which was rebuilt and painted saffron has been re-painted blue by BSP Leader Himendra Gautam. pic.twitter.com/EW2fkQuJdT
— ANI UP (@ANINewsUP) April 10, 2018