அண்மையில் மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், “எனக்கு வயது 69 ஆகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன்.” என்று கூறினார்.
தற்போது “ஒரு மீட்டிங்கில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.” என அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.