)
Benefits Of Peanuts: நிலக்கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலை ஏராளமான சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் ஃபுட் எனலாம். இதில் பாதாமிற்கு இணையான சத்துக்கள் உள்ளது. அதனால் இதை ஏழைகளின் பாதாம் என்றும் அழைப்பார்கள். வேர்க்கடலையில், புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் பி, பாஸ்பரஸ், பொட்டாசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு இதில் உள்ள கலோரிகளும் மிகவும் குறைவு.
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற விலை உயர்ந்த உலர் பழங்களை எல்லோராலும் தினமும் சாப்பிட இயலாது. ஆனால் அதற்காக, வருத்தப்பட வேண்டியதில்லை. அதற்கு இணையான சத்துக்களை கொண்ட வேர்க்கடலை என்னும் நிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம். இதய ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம் வரை பல்வேறு வகைகளில் வேர்கடலை எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்குகிறது.
வேர்க்கடலையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
இதய ஆரோக்கியம்
வேர்க்கடலையை சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்கலாம். மேலும் இதே ஆரோக்கியத்திற்கு தேவையான ஹெச் டி எல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதில் உள்ள மூனு அம்சாசுரேட்டட் கொழுப்பு இதற்கு காரணம்.
உடல் பருமன் குறையும்
வேர்க்கடலை சாப்பிடுவதால், உடல் பருமன் குறையும் என்பது பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை கட்டுப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதனை தாராளமாக உட்கொள்ளலாம்.
மூளை ஆரோக்கியம்
வேர்க்கடலை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால், மூளை தொடர்பான நோய்கள் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். வேர்க்கடலையில் காணப்படும் ட்ரிப்டோன் என்னும் அமிலம், செரடோனின் என்னும் ஹார்மோனை தூண்டுவதால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். செரடோனின் மூளை நரம்புகளை தூண்டுவதால் ஞாபக சக்தியும் சிறப்பாக இருக்கும். மூளை வளர்ச்சிக்கு தேவைப்படும் நியாசின் என்னும் சத்தும் இதில் உள்ளது. மனசோர்வு மற்றும் மன அழுத்தம் விலகி, மூளை ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறப்புனின் என்னும் ஹார்மோன் குறைபாடு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
நீரழிவு
வேர்க்கடலை சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தலாம் ஏனெனில் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மற்றும் கலரியும் மிகவும் குறைவு. சுகர் லெவல்லை கட்டுப்படுத்த நினைப்பவர்கள், நொறுக்குத் தீனியை சாப்பிடுவதற்கு பதிலாக, வேர்க்கடலை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களின் அபாயத்தையும் தடுக்கின்றன.
எலும்பு ஆரோக்கியம்
வேர்க்கடலையில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிம சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள் வலுவாக இருக்கும். எனவே மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவறாமல் பயன்படுத்துவது பலன் கொடுக்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற, எலும்பு முறிதல் நோய் அபாயமும் குறையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ