இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 167 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு கடைசி ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் இந்திய அணி 7 ரன்கள் எடுத்தது. இதில் ஒரு ரன் வைடு (Wide) மூலமாக கிடைத்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுத்தல் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி பந்தை எதிக்கொண்டார் தினேஷ் கார்த்திக் சௌமியா போட்ட பந்தை பவுண்டரிக்கு வெளியே பறக்கவிட்டு சிக்சாக மாற்றினார். தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
திக் திக்!! ஒவ்வொரு பந்திலும் இன்ப அதிர்ச்சியை தந்த தினேஷ் கார்த்திக்
சமூக வலைதளங்களில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதேபோல டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிக்காக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தவர்கள் யார்? யார்? எந்த அணிக்கு எதிராக சிக்ஸ் அடித்தார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தவர்கள் விவரம்:-
2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை வீரர் சமரா கபுகெடாரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றி பெற்றுத்தந்தார்.
2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஈயோன் மோர்கன் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ம் ஆண்டு மேற்க்கு இந்திய தீவு அணிக்கு எதிராக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுல்பிகார் பாபர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி பெற்றுத்தந்தார். இந்த போட்டி கிங்ஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
2014-ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் வஸி சிபண்டா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.