முன்பைவிட பூமி தற்போது அதிவேகமாக சுழல்கிறது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பூமி வேகமாகச் சுற்றுகிறது என்று இங்கிலாந்தின் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2021, 03:39 PM IST
  • சராசரியாக பூமியில் ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் உள்ளது, இருப்பினும் அவை எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்காது.
  • விஞ்ஞானிகள் பூமி சுழலும் நேரத்தை துல்லியமாக அளவிட, அணுக் கடிகாரங்களை (atomic clocks) பயன்படுத்தினர்
முன்பைவிட பூமி தற்போது அதிவேகமாக சுழல்கிறது - விஞ்ஞானிகள் எச்சரிக்கை ! title=

பொதுவாக பூமியானது ஒரு முழுமையான சுழற்சியை அதன் அச்சில் முடிக்க சரியாக 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  இங்கிலாந்து தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி கூறுகையில், அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பூமி வேகமாகச் சுற்றுகிறது என்று எச்சரித்துள்ளார்.

ALSO READ | துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

சராசரியாக பூமியில் ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் உள்ளது, இருப்பினும் அவை எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்காது. சில நேரங்களில், ஒரு வருடத்தில் வேகம் அதிகரிக்கும் அல்லது குறையும். இதன் விளைவாக ஒரு அல்லது இரண்டு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.  இவை கிரகத்தின் மையப்பகுதி, பெருங்கடல்கள், நிலவின் இழுப்பு மற்றும் வளிமண்டலம் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றது.  விஞ்ஞானிகள் பூமி சுழலும் நேரத்தை துல்லியமாக அளவிட, அணுக் கடிகாரங்களை (atomic clocks) பயன்படுத்தினர், அவை சீசியம் அணுக்களில் (caesium atoms) உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு உயர் ஆற்றல்,  இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.  வழக்கமான கடிகாரங்களைப் போல வெப்பநிலை மாற்றங்கள் போன்ற வெளிப்புற மாற்றங்களால் அணுக் கடிகாரங்கள் ஒருபோதும் பாதிப்பிற்கு உள்ளாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

earth

பல ஆண்டுகளாக, நேரத்தை துல்லியமாக அளவிட பயன்படுத்திய அணுக் கடிகாரங்கள் கூட பூமியின் சுழற்சியை முடிக்க எடுக்கும் உண்மையான நேரத்தை சரியாக காட்டாமல் சற்று மாறி காண்பிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.  இவ்வாறு நேரம் மாறுவதைத் தடுக்க, 1972 -ல், விஞ்ஞானிகள் அணுக் கடிகாரங்களில் லீப் வினாடிகளைச் சேர்க்க முடிவு செய்தனர் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜியின்(National Institute of Standards and Technology) நேரம் மற்றும் அதிர்வெண் பிரிவின் இயற்பியலாளரான ஜூடா லெவின் கூறியுள்ளார்.

இருப்பினும் அவை லீப் நாட்களைப் போலவே செயல்படுகின்றன, லீப் ஆண்டுகள் கணிக்க முடியாதவை.  பூமி சுழலும் நேரமானது சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்புகள் சேவையால்(International Earth Rotation and Reference Systems Service) கண்காணிக்கப்படுகிறது. செயற்கைக்கோள்களுக்கு லேசர் கற்றைகளை அனுப்பி அவற்றின் இயக்கங்களை மற்ற முறைகளுடன் அளவிடுகின்றனர்.  பல ஆண்டுகளாக,  ஒரு லீப் செகண்ட் கூட தேவைப்படாமல் பூமியின் சுழற்சியானது 2016-ம் ஆண்டிலிருந்து மெதுவாகக் குறைந்து வருகிறது. மேலும், நாம் வாழும் இந்த கிரகமானது அரை நூற்றாண்டில் இருந்ததை விட வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது,  ஆனால் இந்த நிகழ்வை சரியாக விளக்க விஞ்ஞானிகளிடம் போதிய தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மிக அதிகம்: தவிர்ப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News