2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கே வெற்றி என நாஸ்டர்டாம் கணித்தது உண்மையா!!

உலகின் எந்தவொரு சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகள் நடைபெறும் போதும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பற்றிய விவாதங்களும் கருத்துகளும் இயல்பாகவே எழும். தற்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் அந்த கணிப்புகள் பேசுபொருளாகி, டிரம்பே வெற்றி பெறுவார் என்ற வாதங்கள் சூடுபிடிக்கின்றன.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 21, 2020, 06:07 PM IST
2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கே வெற்றி என நாஸ்டர்டாம் கணித்தது உண்மையா!!

ஒவ்வொரு கலையிலும், துறையிலும் பிரபலமான கலைஞர்கள் உள்ளனர். எந்தவொரு துறையிலும் எப்போதும் மக்கள் பாராட்ட / பயப்பட / பின்பற்ற விரும்பும் ஒரு உருவத்தை அளவீடாக வைத்திருப்பார்கள். விஞ்ஞானத்திற்கு ஐன்ஸ்டீன் என்றால், ஓவியக் கலைக்கு பிக்காசோ என்பதுபோல,கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஆராய முயற்சிப்பவர்களுக்கு நோஸ்ட்ராடாமஸ் (Nostradamus) உள்ளார்.

உலகின் எந்தவொரு சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகள் நடைபெறும் போதும் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பற்றிய விவாதங்களும் கருத்துகளும் இயல்பாகவே எழும். சதாரண மனிதர்கள் முதல் கோட்பாடுகளை வகுக்கும் கோட்பாட்டாளர்கள், சட்டம் இயற்றுபவர்கள் என அனைவரும் மேற்கோளிட்டு காட்டும் நபர்.  நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளை அவர் தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் எதிர்கால நிகழ்வுகளை முன்னதாகவே கணித்து சொன்னார், அது உண்மையாகவும் இருக்கிறது என்று நம்புபவர்களும் உள்ளனர். இந்த புத்தகம் 1555 இல் எழுதப்பட்டது.

எந்தவொரு பெரிய உலகளாவிய நிகழ்வும் நடைபெறும்போதெல்லாம், மான்சியூர் நோஸ்ட்ராடாமஸ் தனது இருப்பை மக்களிடையே உணர வைத்து, தனது பெயரை தக்க வைத்துக் கொள்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 இதற்கு விதிவிலக்கல்ல.

வாக்கெடுப்பு எண்ணிக்கையில் ஜோ பிடென் முன்னணியில் இருக்கலாம். அவர் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் வாக்காளர்களைச் சந்திக்கக்கூடும். ஆனால் அது பயனற்றது என சிலர் நினைக்கிறார்கள், ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவார்.

இந்த நம்பிக்கையின் காரணம்? நோஸ்ட்ராடாமஸின் ஒரு கணிப்பு தான்.
டொனால்ட் டிரம்ப் தான் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறுவதற்கு நோஸ்ட்ராடாமஸின் சில வரிகள்  மேற்கோள் காட்டப்படுகின்றன. ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முன்னறிவிப்பை நோஸ்டாடாமஸ் 'trumpet' என்பதை முத்திரைச் சொல்லாக குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறுகின்றனர்.  
அந்த வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்:
"The false trumpet concealing madness,
"Will cause Byzantium to change its laws.
"From Egypt there will go forth a man who wants
"The edict withdrawn, changing money and standards." என்ற வரிகள் தான் டிரம்ப் வெற்றி பெறுவார் என்பதற்கான முத்திரை வரிகளாக கூறப்படுகின்றன. இதன் பொருள்:
"பைத்தியக்காரத்தனத்தை மறைக்கும் பொய்யான எக்காளம்,
"பைசான்டியம் அதன் சட்டங்களை மாற்றும்.
"எகிப்திலிருந்து விரும்பும் ஒரு மனிதன் வெளியே செல்வான்
"கட்டளை திரும்பப் பெறப்பட்டது, அது பணம் மற்றும் தரங்களை மாற்றுகிறது."
நோஸ்ட்ராடாமஸின் பிற வரிகளைப் போலவே இந்த வரிகளும் கணிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன, இவை சந்தேகத்திற்கு இடமின்றி எதையும் கூறவில்லை. உத்தேசமாகவே கூறப்படுவதாக தோன்றுகிறது. ஆனால் இந்த வரிகளை உண்மையான கணிப்பாக எடுத்துக் கொள்கின்றனர். 
இந்த சிந்தனை செயல்முறையை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் நோஸ்ட்ராடாமஸின் 'கணிப்புகள்' என்பது உலகளாவிய நிகழ்வுகளை சரிபார்க்க ஒரு குறிப்பிட்ட வழியில் விளக்கப்படும் ரகசிய கவிதைகள் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.
‘trumpet’ என்பதை டிரம்ப் என்று எடுத்துக் கொண்டால், அது அவரவர் மனப்போக்கு என்றும் இதை நம்பாதவர்கள் சாடுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் 2016 தேர்தலின் போது எதிர்பாராத வெற்றியைப் பெற்றார். இந்த முறை அவரால் அதே சாதனையை மீண்டும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், நோஸ்ட்ராடாமஸின் பெயர் இதில் அடிபடுவது அமெரிக்க அதிபர் தேர்தலை மேலும் சுவாரஸ்யமாக மாற்றுகிறது.

நோஸ்ட்ராடாமஸ் சொல்வது சத்திய வாக்கு என்று சொல்லும் நபர்களின் வினைகளும், எதிர்வினைகளும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு வலுப்பெறுமா இல்லை விமர்சனங்களை எதிர்கொள்ளுமா என்பது அதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Read Also | முதன்முதலாக  கொரோனாவுக்கு அடிபணிந்து மாஸ்க் போட்ட Pope Francis\

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4

More Stories

Trending News