நியூயார்க்: அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகானத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளதன் படி கலிஃபோர்னியாவில் 5.8 ரிக்ட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கமானது 5.8 ரிக்ட்டர் அளவு என பதிவுசெய்யப்பட்டது. பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது 5.6 ரிக்டர் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் 12.0 கிமீ ஆழத்தில் மையம் கொண்ட இவ்விரு நிலநடுக்கம், துவக்கத்தில் 40.406 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 126.755 டிகிரி மேற்குகிழக்கில் நிகழ்ந்ததாக சைன்ஹோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விரு நிலநடுக்கங்களும் மிக ஆழமாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நேரடியாக நிலநடுக்கம் நகரத்தினை தாக்கியுள்ளதால் பெருமளவான மக்கள் குடியிருப்பு பகுதிகள் சேதம் அடைந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் கருதப்படுகிறது.