வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

வங்காளதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்து கோவில்கள் மீது சமீபத்தில் நடந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து அமெரிக்க நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2021, 09:38 AM IST
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

வங்காளதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்து கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சமீபத்தில் நடந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து அமெரிக்க நிர்வாகம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது. மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கை என்பது தனி  மனித உரிமை என்று கூறி, மத ரீதியிலான  தாக்குதல்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என அமெரிக்கா இப்போது அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச மத சுதந்திரம் பிரிவு அலுவலகம் இந்த தாக்குதல்களை 'மிக வன்மையானது' என்று கூறியது.

வங்காளதேசத்தில்  (Bangladesh)  இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலுக்கு கண்டனம் தெரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சமீபத்தில் நடந்த வன்முறை தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் ஒரு மனித உரிமை, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த புதன்கிழமை துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது சமூக வலைதளங்களில் அவதூறான செய்தி வெளியானதை அடுத்து வங்கதேசத்தில்இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பங்களாதேஷில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் 66 வீடுகளைத் தாக்கி, குறைந்தது 20 இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். நாட்டில் நடந்த தனித்தனி தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | 'துர்கா பூஜை' தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை: வங்க தேச உள்துறை அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

ALSO READ | மதரீதியான கலவரம்! ஹிந்து கோவில்களில் தாக்குதலை ஏற்படுத்திய கும்பல்!

 

More Stories

Trending News