சிகாகோ: விமானத்தில் திடீர் தீ விபத்து; 20 பேர் காயம்

Updated: Oct 29, 2016, 11:57 AM IST
சிகாகோ: விமானத்தில் திடீர் தீ விபத்து; 20 பேர் காயம்
Zee Media Bureau

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்தில் போயிங் 767 ரக விமானத்தில் தீடிரென புகை வெளிவந்தது. 

அமெரிக்காவின் சிகாகோ நகரின் விமான நிலையத்தில் 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி 

நகருக்கு புறப்பட இருந்தது. தீடிரென விமானத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக விமானி விமானத்தை நிறுத்தினார். விமானம் நிறுத்தப்பட்டதும் அவசர அவசரமாக பயணிகள் வெளியேற் றப்பட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

விமானம் தீ பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பயணிகள் வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. 

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மாலையில் மியாமி நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.