ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை நியமனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Last Updated : Jan 12, 2019, 11:01 AM IST
ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்! title=

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவை நியமனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவை நியமனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு தமிழர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிபர் ராஜபக்ஷ ஆதரவாளரான ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு தகுதியற்றவர் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து மட்டக்களப்பு தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

மேலும் கிழக்கு மாகாண சபையில், கிழக்கு சமூகத்தில் பதற்றங்கள் அதிகரிக்க காரணம் ஹிஸ்புல்லா தான் எனவும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரம், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பெரும்பான்மை நகரங்கள் என இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று கடையடைப்பு போராட்டம்  நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் காரணமாக வங்கிகள் உள்பட உள்ளூர் மற்றும் தேசிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இருதினங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார். மேலும் தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வி, நிர்வாகம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை தமிழர்களின் ஆதரவை இழந்துள்ள ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தற்போது கிழக்கு மாகாணம் போராட்ட களமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News