வெள்ளக்காடாய் மாறிய லிபியா! மழை வெள்ள பலி 5300ஐ தாண்டியது! இயற்கை பேரிடர்

Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது... சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2023, 06:32 AM IST
  • லிபியா வெள்ளப் பேரிடர்
  • வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை
  • மாறா வடுக்களை ஏற்படுத்திய மழைவெள்ளம்
வெள்ளக்காடாய் மாறிய லிபியா! மழை வெள்ள பலி 5300ஐ தாண்டியது! இயற்கை பேரிடர் title=

Strom Effects In Libya: லிபியாவில் 'டேனியல்' புயலுக்குப் பிறகு வந்த பேரழிவு வெள்ளம் நகரங்களை துடைத்து அழித்துவிட்டது. பேரழிவு தரும் வெள்ளம் லிபிய மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. ஏற்கனவே அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நலிவடைந்த இந்த நாட்டிற்கு, இயற்கையும் பேரிடியாக மழை மற்றும் வெள்ளத்தால் அழிவை ஏற்படுத்தியது.

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. கடல் நீர் நகரங்களுக்குள் புகுந்தது. வெள்ளம் காரணமாக பல அணைகள் உடைந்தன. பாலங்கள் உடைந்தன. சாலைகள் அடித்து செல்லப்பட்டன. லிபியாவின் வரலாற்றில் இவ்வளவு பயங்கரமான அழிவு இதற்கு முன் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளத்தினால் தர்னா நகரம் அதிக சேதத்தை சந்தித்துள்ளது. டெர்னா நகரின் 25 சதவீதத்தை வெள்ளம் முற்றிலும் அழித்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு லிபியாவின் டெர்னா நகரம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்தப் பேரழிவு ஏற்பட்டது.

மேலும் படிக்க | மனித இனத்தின் அழிவு கடும்குளிராலா? 1280 பேரால் மனிதகுலம் உயிர்பிழைத்த வரலாறு

இயற்கை பேரிடரின் கோரத்தாண்டவத்தின் நிதர்சனம் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

 
டேனியல் புயலுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. லிபியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, பார்த்த இடங்களில் எல்லாம் சடலங்களாகவே தென்படுவதாக மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் லிபியாவில் உள்ள டெர்னா நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெர்னா நகரின் 25 சதவீதம் முற்றிலும் மறைந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இயற்கை பேரிடர் அழிவின் வடுக்கள் பல காலத்திற்கு பிறகும் மக்களுக்கு தனது எச்சங்களை விட்டுச் செல்லும்.

இதுவரை வெள்ளத்தால் 5,300 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. உண்மையில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தர்னா நகரில் மட்டுமே கடந்த 30 மணி நேரத்தில் 1600க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்வர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மழை மற்றும் வெள்ளப் பேரழிவு காரணமாக, பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | K2-18b கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் உள்ளது! இது ஏலியன்களின் கிரகமா?

பேரழிவு வெள்ளம் தாக்கிய மூன்று நாட்களுக்குப் பிறகும், நாட்டுக்குள் புகுந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை. கனரக வாகனங்களும் தலைகீழாக புரட்டி போடப்படும் அளவுக்கு வேகமாக வெள்ளம் வந்து தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

லிபியாவில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய போதுமான இடம் இல்லை. அதுமட்டுமல்ல, சடல்களை வைக்க மருத்துவமனைகளிலும் இடமில்லை என்று சொல்லும் அளவுக்கு சடலங்கள் குவிந்து வருகின்றன.வீதிகளில் சடலங்கள் அழுகிப் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தண்ணீரால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கத்தினால் அழுத மக்களின் கண்ணீர் வற்றி விட்டாலும், வெள்ளம் மட்டும் இன்னமும் வடிந்தபாடில்லை.

வேறுவழியில்லாத நிலையில், மக்களின் சடலங்கள், பெரிய குழிகளை வெட்டி, அவற்றில் கும்பல் கும்பலாக புதைக்கப்படுகின்றன. டேனியல் சூறாவளி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு இந்த சாட்சியாக லிபியாவே சிதைந்து போய் கிடக்கிறது.

பேரழிவையே விட்டுச் சென்ற சூறாவளியும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கமும் இரண்டு அணைகள் உடைத்தன. அதனால் சீறிப்பாயந்த தண்ணீர் வேகமாக நகரங்களுக்குள் புகுந்தது. மக்கள் தப்பிக்கக் கூட வாய்ப்பில்லாத அளவுக்கு வேகமாக நகரங்களுக்குள் புகுந்த வெள்ளம் மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

லிபியாவில் நீண்டகாலமாக நடந்து வரும் உள்நாட்டுப் போர் ஏற்கனவே மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. அரசியல் ஸ்திரமின்மையால் அந்நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சமூக சமநிலை சீர்குலைந்துள்ள நிலையில் தற்போதைய இயற்கை பேரிடரும் மக்களை விட்டுவைக்கவில்லை.

மேலும் படிக்க | லிபியாவில் அழிவை ஏற்படுத்திய டேனியல் புயல்! 2000 க்கும் மேற்பட்டோர் பலி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News