நாம் ஒரு புதிய நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டில் உள்ள பலவிதமான கலாச்சாரங்கள் நம்மை ஆச்சரியமூட்டும். அதேபோல அந்நாட்டு சட்டத்திட்டங்களும் நமக்கு வியப்பை கொடுக்கும். ஆனால், சில சட்டங்கள், அட இதுக்கு நம்ப நாடே பரவாயில்ல போல என்ற எண்ணத்தை கொடுக்கும். அப்படி விநோத சட்டங்களை நடைமுறையில் உள்ள நாடுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. கனடா நாட்டில் ஒரு எல்லைக்குள் ஒருவர் இறந்தால் அது குற்றமாக கருதப்படுகிறது.காரணம், ஒருவர் தான் இறந்த பிறகு தன் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய உடலுக்கான இடத்தை முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படி பதிவு செய்யாமல் யாராவது இறந்தால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
2. Laser Underwear என்ற மெல்லிய உள்ளாடை அணிவது ஜெர்மனியில் 2008 முதல் சட்டவிரோதமான ஒன்றாக கருதப்படுகிறது.
3. சமோவா நாட்டில் மனைவியின் பிறந்த நாளை மறப்பது மற்றும் மனைவி மீதான பாலியல் வல்லுறவு என்பன தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுகிறது. இது நியூசிலாந்தின் பழமை பேணும் சட்டங்களின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
4. ஹாங்காங் நாட்டில் கணவன் தம்மை ஏமாற்றுவது தெரிந்தால் மனைவிக்கு அவரை கொல்ல சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
5. தூய்மை கடைப்பிடிப்பில் அதிக அக்கறை கொண்ட சிங்கப்பூரில் சூயிங்கம் கொண்டு செல்வதும், அதனை மெல்வதும் சட்டப்படி குற்றமாகும்.
6. 2500 ஆண்டுகள் பழமையான இடிபாடுகளை பாதுகாப்பதற்காக கிரேக்க நாட்டில் உள்ள அக்ரோபோலிஸில் High Heelsக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
7. நகரத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற நோக்கில், வெனிஸில் புறாக்களுக்கு உணவளித்தால் 700 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
8. ஆஸ்திரேலியாவில் 50 கிலோவுக்கு மேல் உருளை கிழங்குகளை வைத்திருக்கவோ அல்லது வீதிகளில் கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஆஸ்திரேலியா வில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவே இங்கு உருளை கிழங்கு விநியோகத்தினர் மற்றும் நுகர்வோர் நலன் கருதி "1946 ஆம் ஆண்டு உருளைக்கிழங்கு விநியோக சட்டம் " உருவாக்கப்பட்டது. இதன் 22 பிரிவின் படி அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்கள் தவிர்ந்த ஏனையோர் 50 கிலோவுக்கு மேலான உருளைக்கிழங்குகளை விற்பனை செய்ய, கொண்டு செல்ல அல்லது வைத்திருக்க தடை விதைக்கப்பட்டு உள்ளது.
9. உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை கழிவறைக்கு செல்பவர்கள் அங்கு உள்ள "பிளஷர்" ஐ உபயோகிக்கக் கூடாதாம். காரணம், பிளஷர் அழுத்துவதன் மூலம் மற்றவர்கள் தூக்கம் பாதிக்கப்படும் என்பதால் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ALSO READ தன்னைத்தானே தேடிய நபர்! இறுதியாக நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR