சீன விண்வெளி ஆய்வு மையம் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளது.
சீன நேரப்படி 8.15 am (0015 GMT) மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வால் தீப்பிடித்து எரிந்து உருகிய நிலையில் கடலில் விழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வு மையம், சீன நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு பசிபிக் கடலில் விழுந்துள்ளதாக சீன ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.