இந்திய கூடைப்பந்து வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்துள்ள இந்தியா!

27 ஆண்டுகளுக்கு பிறகு கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Nov 26, 2024, 10:43 AM IST
    இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது.
    பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஈரான் அணியை எதிர்கொள்கிறது.
    24ம் தேதி கத்தார் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்திய கூடைப்பந்து வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்துள்ள இந்தியா!

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கஜகஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்து ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதை பிரகாசப்படுத்தியுள்ளது இந்தியா. தமிழ்நாடு வீரர் பிரனவ் 32 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். முதல் போட்டியில் அடைந்த தோல்வியால் துவண்ட ரசிகர்களை இந்த வெற்றியின் மூலம் உற்சாகப்படுத்தியுள்ளது இந்திய அணி. இந்திய கூடைப்பந்து சங்கம் முயற்சியில் முதல் முறையாக சென்னையில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி களைகட்டி வருகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்து இந்திய அணியை உற்சாகப்படுத்தினர். அந்தவகையில் இன்றைய போட்டியில் உலக தரவரிசையில் 76 வது இடத்தில் உள்ள இந்திய அணி 69 வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளும் ஏலம் கேட்ட ஒரே வீரர் யார் தெரியுமா?

முதல் கால்பாதியில் கஜகஸ்தான் அணி சிறப்பாக விளையாடி விரைவாக புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இந்திய அணியில் அமிஜோத் மற்றும் சஹாஜி மட்டும் தலா ஒரு 3 பாய்ண்ட் எடுத்து கொடுத்தனர். கஜகஸ்தான் அணியும் இரண்டு 3 பாய்ண்ட் மட்டுமே எடுத்தனர் இருப்பினும் 2 பாய்ண்ட் நம்மை விட அதிகம் எடுத்தால் முதல் கால் பாதியில் 18-9 என கஜகஸ்தான் முன்னிலை பெற்றது. இரண்டாவது கால் பாதியில் சுதாரித்த இந்திய வீரர்கள்  3 பாய்ண்டுகளை குவிக்க தொடங்கினர். கன்வர் சந்து மூன்று 3 பாய்ண்டுகள் எடுத்து அணியின் ஸ்கோரை மல மல வென உயர்த்தினார். இவரோடு சேர்ந்து கேப்டனும் தமிழ்நாட்டு வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் மேலும் மூன்று 3 பாய்ண்டுகளை குவிக்க இந்திய அணி 28 புள்ளிகளை குவித்தது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது கால் பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கத்தார் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்க திணறிய இந்திய வீரர்கள் இந்த போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்ததன் மூலமாக எதிரணியின் கவுண்டுகளுக்கும் முற்றுப்புள்ளிவைக்க முடிந்தது. ஒரு புறம் அமிஜோத், ஹஃபீஸ், பாலா, கன்வர் ஆகியோர் 3 பாய்ண்டுகளை எடுப்பதில் கவனம் செலுத்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பிரனவ் 2 பாய்ண்டுகளை எடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இதனால் மூன்றாவது கால்பாதி முடிவிலும் இந்திய அணி 63-51 என்ற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் இறுதி கால்பாதியிலும் இந்தியாவின் வேகத்தை கஜகஸ்தான் அணியால் தடுத்து நிறுத்தமுடியவில்லை, புள்ளிகளை குவிப்பதிலேயே நமது வீரர்கள் தீவிரம் காட்டினர். தமிழ்நாட்டின் நட்சத்திர வீரர் பிரனவ் 32 புள்ளிகளை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். 

இறுதியில் 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. முதல் போட்டியில் கத்தார் அணியிடம் அடைந்த தோல்விக்கு கஜகஸ்தான் அணியிடம் பழிதீர்த்துக்கொண்டது இந்திய அணி. அத்துடன் முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் துவண்ட ரசிகர்களை இந்த வெற்றியின் மூலம் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் நான்கு போட்டிகளிலும் சேர்த்து 244 புள்ளிகள் குவித்ததன் காரணமாக கஜகஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி  இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.  இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடைபெறும் போட்டியில் ஈரான் அணியையும், 24ம் தேதி நடைபெறும் போட்டியில் கத்தார் அணியையும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

மேலும் படிக்க | IPL Auction 2024: சைலண்டாக ஏலத்தில் தரமான அணியை எடுத்துள்ள ஆர்சிபி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News