ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் சுமார் 92 கிலோ மீட்டர் தொலைவிற்கு சரக்குகளை ரயில் ஒன்று ஏற்றிச்சென்ற சம்பவம் அனைவரது கவணத்தினையும் ஈர்த்துள்ளது!
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு அருகே அமைந்துள்ளது பிரமாண்டமான பிஎச்பி சுரங்கம். இங்கிருந்து ஒருங்கிணைந்த ரிமோட் ஆபரேஷன்ஸ் மையத்திலிருந்து இரும்புத் தாதுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று புறப்பட தயாராக இருந்தது. சரக்கு ரயில் புரப்படுவதற்குள் கேரேஜ்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துவர ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து இறங்கிச் சென்றுள்ளார். கீழிறங்கி சென்ற அவர் திரும்பிவருவதற்குள் திடீரென ரயில் புறப்பட துவங்கியுள்ளது.
மெல்ல வேகமெடுத்து, மணிக்கு சுமார் 110 கி.மீ. வேகத்தில் பயணித்த இந்த ரயில் சுமார் 92 கிமீ வரை சென்றுள்ளது. பின்னர் ரயில் கட்டுப்பாட்ட அறையில் இருந்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஹெட்லேண்ட் துறைமுகத்திற்கு முன்னதாக 119 கி.மீ. தொலைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'உலகின் முதல் நீண்ட தூர தானியங்கி கனரக சரக்கு ரயில்' போக்குவரத்தை இந்தாண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியா ரயில்வேதுறை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆளில்லாமலேயே ஒரு சரக்கு ரயில் சுரங்கத்திலிருந்து 92 கி.மீ. தொலைவு ஓடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.