பிரிட்டன் பொதுத்தேர்தலில் பின்னடைந்ததால் ஜெரமி கார்பின் ராஜினாமா

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா செய்தார்.

Last Updated : Dec 13, 2019, 10:16 AM IST
பிரிட்டன் பொதுத்தேர்தலில் பின்னடைந்ததால் ஜெரமி கார்பின் ராஜினாமா title=

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா செய்தார்.

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே போரிஸ் ஜான்சன் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி மெஜாரிட்டியை நோக்கி பயணித்தது. தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெரமி கார்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

Trending News