இனி இங்கு பிச்சையெடுக்க தடை! மீறினால் சிறை! அரசு அதிரடி!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Last Updated : Aug 23, 2021, 01:33 PM IST
  • மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தெருக்களில் பிச்சையெடுக்க கூடாது என்று அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது
  • இது ஒரு வியாபாரமாக நடைபெற்று வரும் நிலையில் மனித குலத்தையே இழிவுபடுத்தும் செயலாக உள்ளது.
இனி இங்கு பிச்சையெடுக்க தடை! மீறினால்  சிறை! அரசு அதிரடி! title=

நைஜீரியா:  நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று,அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தெருக்களில் பிச்சையெடுக்க கூடாது என்று அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. லாகோஸ் மாகாண அரசு, அவர்களை தொந்தரவாக கருதுவதாகவும், எனவே மாகாணத்தில், இதற்கென்று சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு பிச்சையெடுப்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அக்குழுவானது இயங்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

beggers

இது தொடர்பாக, லாகோஸ் மாகாணத்தின் இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, "சட்டத்திற்கு இணங்கி வாழும் மக்களுக்கு தெருவில் யாசகம் கேட்பவர்கள் தொந்தரவாக இருக்கிறார்கள். மேலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்பவர்களும், வியாபாரிகளும் வேறு பகுதியில் இருந்து இந்த மாகாணத்திற்கு வரவரவழைக்கப்படுகிறார்கள். இது ஒரு வியாபாரமாக நடைபெற்று வரும் நிலையில் மனித குலத்தையே இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. அத்துடன் குழந்தைகளை கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்துகிறார்கள்.

ALSO READ தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயாராகியுள்ள அரசு..!

மேலும் தெருக்களில் இது போன்ற நபர்களின் செயல்பாடுகள் மக்களின் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் தொந்தரவாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் தொல்லைகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் உண்டாக்குகிறது.இதனால் பிச்சையெடுப்பதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார். நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இவ்வாறு பிச்சையெடுக்க வைக்கும் குழுக்கள் பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News