Tanzania Plane Crash: ஏரியில் விழுந்த விமானம்... 49 பயணிகள் கதி என்ன?

Tanzania Plane Crash : தான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.  

Written by - Sudharsan G | Last Updated : Nov 6, 2022, 04:08 PM IST
  • விமானத்தில் மொத்த பயணிகள் குறித்த தகவல்கள் உறுதியாகவில்லை.
  • விபத்துக்குள்ளான விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
Tanzania Plane Crash: ஏரியில் விழுந்த விமானம்... 49 பயணிகள் கதி என்ன? title=

Tanzania Plane Crash : தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது. 

இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண அமல் எப்போது... தகவல் அளித்த எலான் மஸ்க்!

விமானத்தில் இருக்கும் பயணிகள் எண்ணிக்கை குறித்து இன்னும் முழுமையான விவரம் தெரியவில்லை.  விமானத்தில் 49 பேர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ப்ரிசிஷன் ஏர் நிறுவனம் விமான விபத்தை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 மணி நேரத்தில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வடக்கு தான்சானியாவில் சஃபாரி நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | பாகிஸ்தானில் அவசர நிலையா...? இம்ரான் கான் பேச்சை ஒளிபரப்ப தடை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News