Russia: முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு தடை விதித்த ரஷ்யா

Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 20, 2023, 07:35 AM IST
  • அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா
  • டொனால்ட் டிரம்ப்புக்கு மறைமுக ஆதரவு
  • அமெரிக்க முன்னாள் அதிபருக்கும் ரஷ்யாவுக்கு வரத் தடை
Russia: முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு தடை விதித்த ரஷ்யா  title=

வாஷிங்டன்: அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ஜிம்மி கிம்மல், கோல்பர்ட் மற்றும் சேத் மேயர்ஸ் ஆகியோரும் இந்தத் தடைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நாட்டிற்குள் நுழைய ரஷ்யாவால் தடைசெய்யப்பட்ட 500 அமெரிக்கர்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஒருவர் என சிஎன்என் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, "ஜோ பிடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்புத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக" அமெரிக்க நிர்வாகக் கிளையின் பல மூத்த உறுப்பினர்கள் உட்பட "500 அமெரிக்கர்கள்" நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை (2023, மே 19) தெரிவித்துள்ளது.  

இந்தப் பட்டியலில், ஒபாமாவைத் தவிர, முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேன், பல அமெரிக்க செனட்டர்கள், சார்லஸ் கியூ பிரவுன் ஜூனியர் உட்பட பல முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.  

மேலும் படிக்க | PM Modi in G7 Summit: 3 நாடுகள்... 40 சந்திப்புகள்... பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!
 
"இணைக்கப்பட்ட 'பட்டியல்-500' இல், ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட தாக்குதலை நடத்தியதாகக் கூறப்ப்படும் விவகாரத்தில், தவறிழைத்ததாக சந்தேகபப்டும் நபர்களை துன்புறுத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ள அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களில் உள்ளவர்களும் அடங்குவார்கள்" என்று CNN வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 2020-ல் நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதில் அதிருப்தி அடைந்த சிலர் ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க தலைகரில் நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான உறவுகள் தற்போது மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், ரஷ்ய அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தத் தடைகளை நியாயப்படுத்தியது, "ரஷ்யாவிற்கு எதிராக எந்தவொரு விரோத தாக்குதலுக்கும் கடுமையான எதிர்வினைகள் கண்டிப்பாக இருக்கும் என்பதை வாஷிங்டன் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு... 8 பேர் பலி... பலர் காயம்!

ரஷ்யா - அமெரிக்கா உறவுகள்

1803 இல் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவை அங்கீகரித்தது, மேலும் இரு நாடுகளும் 1809 இல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின .1776 முதல் 1917 வரை அமெரிக்காவும் ரஷ்யாவும் அவ்வப்போது கலாச்சார மற்றும் வணிகப் பரிமாற்றங்களுடன் நல்லுறவைப் பேணி வந்தன. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ரஷ்யா நடுநிலை வகித்தாலும், வட அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது.

அலாஸ்கா தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் இருந்தன, குறிப்பாக 1890-1914 காலகட்டத்தில் ரஷ்யாவில் யூதர்களை தவறாக நடத்துவது தொடர்பான பதற்றங்கள் அதிகரித்தன. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சுமூகமாக இருந்தாலும், வணிகம் இரு நாட்டிற்கும் ஒரு முக்கிய காரணியாக இருந்ததில்லை.

ரஷ்யாவிலிருந்து பெரிய அளவிலான இடம்பெயர்வு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியபோது, சிறுபான்மை இன மக்களில் பெரும்பாலோனவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இரு நாடுகளும் கடல்சார் சட்டம் மற்றும் வர்த்தகம் போன்ற விஷயங்களில் ஒத்துழைக்கத் தொடங்கின.

மேலும் படிக்க | GNCTD: தேசிய தலைநகர் சிவில் சேவைகள் ஆணையம் அமைக்க அவசரச்சட்டம்: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News