Russia Ukraine war update: மரியுபோல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 200 சடலங்கள்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2022, 06:24 AM IST
  • ரஷ்யா மரியுபோலை கைப்பற்றியது உண்மையா?
  • இடிபாடுகளுக்கிடையில் 200 சடலங்கள்
  • அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்
Russia Ukraine war update: மரியுபோல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 200 சடலங்கள் title=

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மரியுபோல் நகரின் மேயரின் ஆலோசகரின் கூற்றுப்படி, உக்ரைனின் மரியுபோல் நகரில், ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இடிபாடுகளுக்குக் கீழ், கட்டிடத்தின் அடித்தளத்தில் சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சர்வதேச சமூகத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

உடல்கள் அழுகியிருப்பதாகவும், அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் Petro Andryushchenko டெலிகிராம் சமூக ஊடகத்ஹ்டில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அசோவ் கடல் கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ரஷ்யா (Russia Ukraine War) தெரிவித்துள்ளது. இந்த படையெடுப்பில் ரஷ்யாவால் கைப்பற்ற முடிந்த ஒரே பெரிய நகரம் மரியுபோல் ஆகும்.

மரியுபோலைக் கைப்பற்றுவது ரஷ்யாவிற்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது, ஏனெனில் ரஷ்யாவால், இந்தப் படையெடுப்பில் எந்த பெரிய நகரத்தையும் கைப்பற்ற முடியவில்லை.

மரியுபோல் ஒரு துறைமுகமாக இருப்பதால், ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கான ரஷ்யாவின் திறன்களை மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால், துறைமுக நகரை இழந்தது உக்ரைனுக்கு பின்னடைவாக இருக்கும்.

மேலும் படிக்க | உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்

உக்ரைனின் வர்த்தகங்கள் மேலும் பாதிக்கப்படும். மரியுபோல் அமைந்திருப்பது அது அமைந்திருக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டான்பாஸுக்கும் கிரிமியாவுக்கும் இடையில் மரியுபோல் அமைந்திருக்கிறது என்பதும், கிரிமியா ஏற்கனவே ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் முக்கியமான விஷயமாகும். டான்பாஸிலும் ரஷ்யாவின் செல்வாக்கு அதிகமாகவுள்ளது.

டான்பாஸ் மற்றும் கிரிமியா என இரண்டு பகுதிகளையும் இணைக்க மரியுபோல் ரஷ்யாவுக்கு உதவும் என்பதால் இந்த நகரத்தைக் கைப்பற்றியது ரஷ்யாவுக்கு முன்னேற்றம் என்றால், உக்ரைனுக்கு மரியுபோலை இழந்தது மிகப் பெரிய பின்னடைவாகும்.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News