சானியா - மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

சானியா மிர்ஷா - சொயிப் மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Last Updated : Oct 30, 2018, 12:32 PM IST
சானியா - மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! title=

சானியா மிர்ஷா - சொயிப் மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மற்றம் சொயிப் மாலிக் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சொயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். தாய்மை அடைந்துள்ள சானியா மிர்ஷா தற்போது நலமாக இருப்பதாகவும் இந்த பதிவில் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷா மற்றும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொடணர். சமீபத்தில் தங்களது 8-ஆம் ஆண்டு திருமண நாளினை கொண்டாடிய இத்தம்பதியர், தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் இணைய உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

மிர்ஷா, மாலிக் என பெயரிடப்பட இரண்டு t-shirt க்கு இடையில் ஒரு சிறிய t-shirt ஆனது மிரிஷா மாலிக் என்னும் பெயரில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றினை இந்த ஜோடி தங்களது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டு தங்களது குடும்பத்தின் புதிய வரவினை குறித்த செய்தியினை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் தற்போது சானியா தாய்மை அடைந்திருப்பதாக மாலிக் தெரிவித்துள்ளார்.

31-வயது ஆகும் இந்த இந்திய வீராங்கனை தனது காதலை குறித்தும், திருமணத்தினை குறித்தும் தெரிவிக்கையில் இந்திய நாடே கொந்தளித்தது. இந்தியரான ஒருவர் எப்படி எதிரி நாடான பாக்கிஸ்தானியரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என குரல்கள் எழுந்தன. ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியர் தற்போது அமைதியான மற்றும் மகிழ்சியான வாழ்க்கையினை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News