ரியாத்: சவுதி அரேபியா இளவரசரான "துர்க்கி பின் சவுத் அல்-கபீர்" என்பவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்ட அல் கபீர் தால் அவருக்கு இன்று மரண தண்டனை அளிகபட்டுள்ளது.
சவுதியில் 1977 ஆம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது அரிதாகும். சட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சவுதி அரேபியாவில் 134 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 134-வது நபராக அந்நாட்டின் இளவரசர் கபிர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.