தென்சீனக் கடல் விவகாரம்: சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயார்

Last Updated : Dec 14, 2016, 03:54 PM IST
தென்சீனக் கடல் விவகாரம்: சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தயார் title=

தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என கடற்படையின் தளபதி அட்மிரல் கூறியுள்ளார்.

அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பகுதி தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுப் பயன்பாட்டுக்கு உரிய ஒரு பகுதி ஒருதலைப்பட்சமாக மூடப்படுவதை அனுமதிக்கமுடியாது. அங்கு எத்தனை ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் மாற்றமில்லை. தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என அவர் கூறினார்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சீனா கொள்கை குறித்துக் கேள்வி எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவுகிறது. தற்போது அட்மிரல் ஹரி ஹாரிஸ் கருத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

Trending News