இலங்கையின் மத்தல விமான நிலையத்தினை இயக்கும் பொறுப்பினை இந்தியாவிடம் ஒப்படைப்பது என இலங்கை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது!
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இந்த வாரம் கூடும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அமைச்சரவை பத்திரம் இந்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிகிறது.
நஷ்டத்தில் இயங்கி வரும், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவு - இலங்கை அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. அதன் பின்னர், இந்தப் பேச்சுக்கள் முடங்கிப் போயின.
இந்தநிலையில் மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை ஒப்பந்த பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேலையில் கடந்த காலங்களில் நெற் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்த மத்தல விமான நிலையம் தற்பொழுது மீள புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.