பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட தாய்லாந்து இளவரசி...

தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி உபோல்ரத்தனா ராஜகன்யா அந்நாட்டின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்டுள்ளார்!

Updated: Feb 8, 2019, 02:23 PM IST
பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட தாய்லாந்து இளவரசி...
Image Courtesy: Reuters

தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி உபோல்ரத்தனா ராஜகன்யா அந்நாட்டின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்டுள்ளார்!

வரும் மார்ச் 24-ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களுக்கான பதிவு தற்போது நடைப்பெற்று வருகிறது.  இந்த நிலையில் தற்போது அந்நாட்டின் பிரதமர் வேட்பாளராக தாய்லாந்து மன்னரின் மூத்த சகோதரி உபோல்ரத்தனா ராஜகன்யா முன்மொழியப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

67 வயது ஆகும் இளவரசி உபோல்ரத்தனாவைத் ‘தாய் ரக்ஷ சார்ட்’ கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது. தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினாவாட்ராவுடன் இக்கட்சி தொடர்பு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடுல்யதேயின் ஆக மூத்த பிள்ளையான உபோல்ரத்தனா, மஸச்சியூசட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தன்னுடன் பயின்ற மாணவர் ஒருவரைத் காதல் திருமணம் செய்தார். பின்னர் அந்தத் திருமணத்தால் இளவரசி பட்டத்தைத் துறந்த உபோல்ரத்தனா தாய்லாந்து விட்டு வெளியேறினார்.

பின்னர் இத்தம்பதியர் கடந்த 1998-ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த நிலையில் உபோல்ரத்தனா தாய்லாந்திற்குத் திரும்பினார். மன்னர் பரம்பரையை சேர்ந்த உபோல்ரத்தனா தற்போது அரசியல் களத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.