VIDEO: லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து; 78 பலி

 லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலியாகினர்.

Last Updated : Aug 5, 2020, 11:07 AM IST
VIDEO: லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து; 78 பலி title=

பெய்ரூட்: மத்திய பெய்ரூட் அருகே துறைமுகக் கிடங்குகளில் ஏற்பட்ட ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 78 பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது.

இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக  வெளியேறியது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அவர், இரண்டு வார அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்றார். "நாங்கள் கண்டது ஒரு பெரிய பேரழிவு" என்று லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் கெட்டானி ஒளிபரப்பாளர் மாயதீனிடம் கூறினார். 

பெய்ரூட் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் மூழ்கியிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நகரத்திற்கு வெளியே சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கிலிருந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் கிழக்கே பெக்கா பள்ளத்தாக்கு ஆகியவை உதவிக்கு அழைக்கப்பட்டன. மிகப்பெரிய குண்டுவெடிப்பு 1975-90 உள்நாட்டுப் போரின் நினைவுகளையும் அதன் பின்விளைவுகளையும் புதுப்பித்தது. ஒரு சில குடியிருப்பாளர்கள் பூகம்பம் ஏற்பட்டதாக நினைத்தனர். திகைத்து. 

இந்த விபத்து குறித்து லெபானான் பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்  6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சினையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்றார். 

இந்நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது, ஜன்னல்களை அதிர்ந்தன. கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

Trending News