மக்கள் தகுதி அடிப்படையில் தான் அமெரிக்க வர வேண்டும்: டிரம்ப்...

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் அனைவரும் தகுதி அடிப்படையில் வர வேண்டும் என அதிபர் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2018, 03:46 PM IST
மக்கள் தகுதி அடிப்படையில் தான் அமெரிக்க வர வேண்டும்: டிரம்ப்... title=

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் அனைவரும் தகுதி அடிப்படையில் வர வேண்டும் என அதிபர் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்...! 

டொனால்டு ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து அமெரிக்க அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அங்கு பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், குடிபெயர வருவோர் விவகாரத்தில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.  

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் தகுதிகள் அனைவரும் தகுதி அடிப்படையில் வர வேண்டும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நம் நாட்டிற்கு வருபவர்கள் சட்டப்பூர்வமாக வர வேண்டுமே தவிர சட்டவிரோதமாக வரக்கூடாது. தகுதியின் அடிப்படையில்தான் வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்போம். அமெரிக்க எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்பாக உள்ளேன். 

இந்தியாவில் இருந்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் (IT professionals) அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு உதவி செய்கின்றனர். அவர்களைப் போன்றவர்கள்தான் அமெரிக்காவுக்குள் வர வேண்டும். இங்கு வருபவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்களா என்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

உலகிலேயே பொருளாதாரத்தில் அதிக சக்தி கொண்டதாக நாங்கள்தான் (அமெரிக்கா) இருந்து வருகிறோம். எங்களை நீங்கள் சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அல்லது எந்தவொரு நாட்டுடனும் ஒப்பிட்டு பார்க்கலாம். அப்போது நாங்கள்தான் முன்னிலையில் இருப்போம். வெளிநாட்டவர் பலர் இங்கு வருவதற்கு ஆசைப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News