அதிர்ச்சி: 16-வயதில் 4 குழந்தைகளுக்கு தாயான உபி பெண்!

உத்திரபிரதேச மாநிலம் சாப்பல் பகுதியை சேர்ந்த 16 வயது பெண், தொடர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதால் தற்போது 4 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்!

Updated: Apr 25, 2018, 10:23 AM IST
அதிர்ச்சி: 16-வயதில் 4 குழந்தைகளுக்கு தாயான உபி பெண்!
Representational Image

உத்திரபிரதேச மாநிலம் சாப்பல் பகுதியை சேர்ந்த 16 வயது பெண், தொடர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதால் தற்போது 4 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்!

இது தொடர்பாக தன் தந்தை மற்றும் சித்தியின் மீது பாரத்பூர் கவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாகவது....

கடந்த 2010-ஆம் ஆண்டு எங்களது தாய் இறந்துவிட்டார், அதனால் எங்கள் தந்தை மற்றோரு பெண்னை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களின் வாழ்க்கைக் இடையூராக இருந்த எங்களை (பாதிக்கப்பட்ட பெண், அவரது 2 சகோதரிகள்) விற்றுவிட்டனர்.

அப்போது இச்சிறுமிகளின் வயது முறையே 8, 6 மற்றும் 4. பாதிகப்பட்ட பெண்ணினை ராஜஷ்தானை சேர்ந்த 50 வயது ஆணுக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் முதியவரால் தொடர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் இச்சிறுமி 4 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

சம்பந்தப்பட்ட முதியவரின் பிடியில் இருந்து பலமுறை தப்பிக்க முயற்சித்த அவர், சமீபத்தில் தப்பித்து காவல்துறை உதவியினை நாடியுள்ளார். 

இச்சிறுமியின் புகாரின் அடிப்படையில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது IPC 366A, 372, 370A-ன் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்னின் தந்தை, சித்தி மற்றும் அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.