+2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: ரிசல்ட் தேதி அறிவிப்பு!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதிவருகின்றனர்.

Last Updated : Apr 6, 2018, 11:11 AM IST
+2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: ரிசல்ட் தேதி அறிவிப்பு!! title=

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதிவருகின்றனர்.

முதல் நாளில் நடைபெற்ற மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாட தேர்வு, குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து முடிந்தன. கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல் உட்பட, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பாட வாரியாக தேர்வுகள் நடந்தன. பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள் எளிதாக இருந்தன.

சென்னை மாநகரில் மட்டும் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவர்கள்  தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியில், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

Trending News