கடந்த 2014ல் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈராக்கில் கட்டுமான பணிக்கு சென்றனர். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் துவங்கிய போது, மொசூல் நகரில் 39 இந்தியர்கள் மாயமானார்கள்.
அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. அவர்கள், மொசூல் நகரில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 2017 ம் வருடம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அவர்களை மீட்டு தர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
General VK Singh will go to Iraq to bring back mortal remains of Indians killed in Iraq. The plane carrying mortal remains will first go to Amritsar, then to Patna and then to Kolkata: EAM on 39 Indians who were kidnapped in Mosul pic.twitter.com/A0p6UaUMtp
— ANI (@ANI) March 20, 2018
இந்நிலையில், ஈராக் மோசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பார்லிமென்டில் தெரிவித்துள்ளார். ஈராக்கில் இருந்து உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
Deep penetration radar confirmed that all Indians were dead after all bodies were exhumed: EAM Sushma Swaraj in #RajyaSabha on 39 Indians kidnapped in Iraq's Mosul pic.twitter.com/dhXxGLh0ar
— ANI (@ANI) March 20, 2018
Yesterday we got information that DNA samples of 38 people have matched and DNA of the 39th person has matched 70 per cent: EAM Sushma Swaraj in #RajyaSabha on 39 Indians kidnapped in Iraq's Mosul pic.twitter.com/almEfDANlz
— ANI (@ANI) March 20, 2018