நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஓர் சந்திப்பு! புகைப்படம் மற்றும் வீடியோ பார்க்க!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி வேகமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே, விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். 

Updated: May 5, 2018, 06:09 PM IST
நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஓர் சந்திப்பு! புகைப்படம் மற்றும் வீடியோ பார்க்க!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விஜய், இன்று கேரள மாநிலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுவரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.