மக்களே உஷார்! தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடக்கம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Last Updated : May 4, 2018, 08:34 AM IST
மக்களே உஷார்! தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடக்கம்! title=

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அக்னி நட்சத்திரமும் ஆரம்பிக்க இருப்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். 

இந்த 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை வட மாநிலங்களிலேயே இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும்.

மேலும் தமிழகத்திலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்து வரும் 24 நாட்களுக்கு தமிழக்ததில் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Trending News