Napoleon Son Dhanoosh Gift From His Wife : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகர் என்ற இடத்தை பெற்றவர் நடிகர் நெப்போலியன். ஆரம்பத்தில் வில்லன் நடிகராகவும், நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரங்களிலும் தோன்றிய இவர், பின்னர் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், இப்போது அமெரிக்க வாழ் தமிழராக இருக்கிறார்.
நெப்போலியன் மகன்:
நடிகர் நெப்போலியன்-ஜெயசுதா தம்பதியினருக்கு தனுஷ் மற்றும் குணால் எனும் இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டவர். இந்தியாவில் வசித்து வந்த நெப்போலியன் தன் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை செட் ஆனதால் குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.
அமெரிக்காவில் விவசாயம், ஐடி தொழில் என வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வருகிறார் நெப்போலியன். தனது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர், அதன்படி சமீபத்தில் ஜப்பானில் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்த திருமணம்!
நெப்போலியன் மகன் தனுஷிற்கு சமீபத்தில் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர், சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனுஷ், வீல் சேர் இன்றி எங்கும் செல்ல மாட்டார். இவரது திருமணமும் அப்படி வீல் சேரில் அமர்ந்தவாருதான் நடைப்பெற்றது. இதைப் பார்த்து சிலர் அந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகி விட்டது என்று நெகடிவாக கூறினாலும் இன்னும் சில புதிதாக திருமணமான தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
26 வயதாகும் தனுஷை திருமணம் செய்து கொண்ட அக்ஷயாவிற்கு 21 வயது ஆவதாக கூறப்படுகிறது. தனுஷிற்கு பெண் பார்க்க தொடங்கிய போது தனக்கு அதில் விருப்பம் இருப்பதாக தாமாக தன் குடும்பத்தினர் முன் வந்து தெரிவித்திருக்கிறார், அக்ஷயா. அவரது நிலை குறித்து அனைத்தும் தெரிந்துதான் இதற்கு சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஸ்பெஷல் பரிசு!
நெப்போலியன் வீட்டு திருமணம், வெளிநாட்டில் நடந்திருந்தாலும் தங்கள் இல்லத்தில் நடந்த திருமணம் போல இது குறித்து தெரிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, தனுஷிற்கு அக்ஷயா கொடுத்திருக்கும் ஒரு பரிசு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்து அக்ஷயா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், தனக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம் என்று கூறியிருக்கும் அவர், தன்னுடைய கையால் தனுஷின் முகத்தை வரைந்து அவருக்கு பரிசாக கொடுத்ததாக கூறியிருக்கிறார். இது, பலரை நெகிழ வைத்திருக்கிறது.
ஜப்பானில் திருமணம் செய்தது ஏன்?
மேலும் படிக்க | நடிகர் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வீடா? வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நெப்போலியனும் அவரது மனைவியும், தங்கள் மகனின் திருமணத்திற்கு முன்னர் ஒரு பேட்டி அளித்திருந்தனர். அதில், தனுஷிற்கு ஜப்பான் நகரின் டோக்கியோவிற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசை இருந்ததாகவும், அவரது இந்த விருப்பத்தை நிறைவேற்ற ட்ரிப்பிற்கு ப்ளான் செய்ததாகவும் கூறினார். அந்த நேரத்தில் வரன் அமைந்ததால், ட்ரிப்பையும் திருமணத்தையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கிறார்.
தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால், அவர் விமானத்தில் பறக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுருத்தி இருக்கின்றனர். அதனால், அமெரிக்காவில் இருந்து ஜப்பானிற்கு நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினர் கப்பலில் பயணம் செய்திருக்கின்றனர். இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் ரூ.150 கோடி செலவானதாக நெப்போலியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிகர் நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்!! அதுவும் 6 மாசத்துலையே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ