ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி.. இந்த வங்கிகளை மிஸ் பண்ணிராதீங்க

Bank fixed deposits: சிறு நிதி வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு 8 முதல் 8.5 சதவீதம் வட்டி கொடுத்து வருகிறது. அதன்படி பிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வட்டி வழங்கும் 7 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2024, 02:27 PM IST
  • 8 முதல் 8.5 சதவீதம் வட்டியை சிறு நிதி வங்கிகள் கொடுத்து வருகிறது.
  • கடந்த ஜனவரி 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • டெபாசிட்டுகளுக்கு 3.75 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி.. இந்த வங்கிகளை மிஸ் பண்ணிராதீங்க title=

சிறு நிதி வங்கிகள் நிலையான வைப்பு விகிதங்கள்: முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் லாபகரமான விருப்பங்களைத் தேடுவதால், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) ஒரு பிரபலமான தேர்வாக வெளிப்படுகின்றன. இதனால் தான் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஆனால் குறைவான வருமானம் காரணமாக பல நேரங்களில் மக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய தயங்குவார்கள். ஆனால் இன்று நாம் 9 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும் பல வங்கிகளின் நிலையான வைப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். இவை சிறு நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதங்களின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு 8 முதல் 8.5 சதவீதம் வட்டியை சிறு நிதி வங்கிகள் கொடுத்து வருகிறது. அந்த வகையில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்னதாக வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதை சரிபார்க்கவும். இந்த பட்டியலில் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி முதல் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வரை உள்ளன.

AU சிறு நிதி வங்கி - AU Small Finance Bank :
AU ஸ்மால் ஃபைனான்ஸ் (AU Small Finance Bank) வங்கியானது, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 3.75 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. மறுபுறம் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 சதவீதம் விகிதத்தில் வட்டியை வழங்குகிறது. இந்த கட்டண மாற்றம் கடந்த ஜனவரி 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | Aging Population: சீனியர் சிட்டிசன்களுக்கு இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்! நிதி ஆயோக் பரிந்துரை!

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி - Equitas Small Finance Bank :
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியானது தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 3.5 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. இது தவிர, 444 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.50 சதவீதம் வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த கட்டண மாற்றம் கடந்த 21 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ESAF சிறு நிதி வங்கி - ESAF Small Finance Bank :
ESAF சிறு நிதி வங்கியானது தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. அதேபோல் இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.25 சதவீதம் வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த கட்டண மாற்றம் கடந்த ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஃபின்கேர் சிறு நிதி வங்கி - Fincare Small Finance Bank :
ஃபின்கேர் சிறு நிதி வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 3 சதவீதம் முதல் 8.61 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. அதேசமயம் 750 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.61 சதவீதம் வட்டியை வங்கி வழங்குகிறது. இந்த கட்டண மாற்றம் கடந்த அக்டோபர் 28, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஜனா சிறு நிதி வங்கி - Jana Small Finance Bank :
ஜனா சிறு நிதி வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 3% முதல் 8.50% வரை வட்டியை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. அதே நேரத்தில், 365 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.50 சதவீதம் வட்டியைப் பெறுகிறார்கள். இந்த கட்டண மாற்றம் கடந்த ஜனவரி 2, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சூர்யோதாய் சிறு நிதி வங்கி - Suryoday Small Finance Bank :
சூர்யோதாய் சிறு நிதி வங்கியில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு 4 சதவீதம் முதல் 8.65 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், 2 ஆண்டுகள் 2 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களே... உங்கள் கணக்கில் விரைவில் வட்டியை வரவு வைக்க தயாராகிறது EPFO!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News