அடி தூள்!! மத்திய அரசு ஊழியர்களின் பல அலவன்சுகளில் ஏற்றம்... குறிப்பாணை வெளிவந்தது

7th Pay Commission, Increase in Allowances: பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏப்ரல் 2, 2024 தேதியிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பாணையை (OM) வெளியிட்டுள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு வகையான அலவன்ஸ்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2024, 08:55 AM IST
  • சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
  • இதையடுத்து 46% ஆக இருந்த அவர்களது டிஏ இப்போது 50% ஆக உயர்ந்துள்ளது.
  • ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (DR) 46% -இலிருந்து 50% ஆக உயர்ந்துளது.
அடி தூள்!! மத்திய அரசு ஊழியர்களின் பல அலவன்சுகளில் ஏற்றம்... குறிப்பாணை வெளிவந்தது title=

7th Pay Commission, Increase in Allowances: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏப்ரல் 2, 2024 தேதியிட்ட அதிகாரப்பூர்வ குறிப்பாணையை (OM) வெளியிட்டுள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு வகையான அலவன்ஸ்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அகவிலைப்படி (DA)

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து 46% ஆக இருந்த அவர்களது டிஏ இப்போது 50% ஆக உயர்ந்துள்ளது. ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (DR) 46% -இலிருந்து 50% ஆக உயர்ந்துளது. இந்த ஏற்றம், ஜனவரி 1, 2024 முதல் செயல்படுத்தப்படும்.

குழந்தைகளின் கல்வி உதவித்தொகை (CAA)

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50% உயர்த்தப்பட்டவுடன் குழந்தை கல்விக்கான கொடுப்பனவு (Child Education Allowance) 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. குழந்தை கல்வி உதவித்தொகை / விடுதி மானியம் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதி மானியம் மாதம் 6750 ரூபாயாகும். மத்திய ஊழியர்களின் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், இந்த குழந்தை கல்வி உதவித்தொகை இரு மடங்கு வழங்கப்படும்.

இடர் கொடுப்பனவு

அபாயகரமான பணிகளில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் (Central Government Employees), தங்கள் பணியால் காலப்போக்கில் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடிய ஊழியர்களுக்கும் இந்த அலவன்ஸ் வழங்கப்படுகிறது. இழப்பீட்டு கட்டமைப்பிற்குள் வகைப்படுத்துவதில் தெளிவை உறுதிப்படுத்த இடர் கொடுப்பனவு (Risk Allowance) எந்த விதத்திலும் ஊதியமாக கருதப்படுவதில்லை என DoPT கூறியது.

மேலும் படிக்க | RBI அதிரடி அறிவிப்பு: இனி UPI மூலமே பணம் டெபாசிட் செய்யலாம், குஷியில் மக்கள்

இரவு நேர அலவன்ஸ் (NDA)

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இரவு நேரப் பணிகளுக்கான அலவன்சுகளும் (Night Duty Allowance) மாற்றப்பட்டுள்ளது. இரவு வேலை என்பது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செய்யப்படும் பணியாகும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.43,600 அடிப்படை சம்பளம் ஆகும். NDA இன் மணிநேர விகிதம் [(BP+DA)/200] என்ற வகையில் தீர்மானிக்கப்படுகிறது.  7வது மத்திய ஊதியக் குழுவின் படி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி கொண்டு இது கணக்கிடப்படுகிறது.

ஓவர் டைம் அலவன்ஸ் (OTA)

ஓவர் டைம் அலவன்ஸ் (Over Time Allowance) விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், 'செயல்பாட்டு ஊழியர்கள்' என வகைப்படுத்தப்பட்ட ஊழியர்களின் பட்டியலைத் தொகுக்கும் பொறுப்பு அமைச்சகங்கள்/துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. OTA வழங்குவது பயோமெட்ரிக் வருகையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். செயல் நடைமுறைகளை எளிதாக்கி, கூடுதல் நேர வேலை திட்டமிடலில் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதே இதன் நோக்கமாகும். 

சிறப்பு கொடுப்பனவு

மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு, குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உள்ளவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவதற்கு, சிறப்பு கொடுப்பனவு (Special allowance) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழிவகையின் கீழ், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயது ஆகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க | கடந்தாண்டு 17,545 கோடி-இந்த ஆண்டு தெருக்காேடி! பைஜு ரவீந்திரன் சொத்துக்களை இழந்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News