RBI Bank Holidays In April 2024 : மார்ச் மாதம் முடிவடைந்து தற்போது இன்று முதல் புதிய மாதம் அதாவது ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று முதல் ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ள நிலையில் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், உடனடியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறையை காலண்டரை ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
ஏனெனில் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டு நிறைவுக்காக இன்று அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருக்கும். புதிய நிதியாண்டு 2024-25 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் போது, வங்கிகள் நிதியாண்டு இறுதி வேலைகளை முடிக்கும். எனினும் சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் வங்கிகள் இன்று திறந்திருக்கும்.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என்று ஆர்பிஐ (Reserve Bank of India) வெளியிட்ட காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனை போன்ற வேலைகளை செய்ய வங்கி விடுமுறைகளை (Bank Holidays) நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது வங்கி விடுமுறைகளின் முழுமையாம் விவரத்தை இங்கே சரிப்பார்க்கலாம்.
ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :
1 ஏப்ரல் 2024: நிதியாண்டின் இறுதியில் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.
5 ஏப்ரல் 2024: பாபு ஜக்ஜீவன் ராம் மற்றும் ஜுமாத்-உல்-விடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
7 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
9 ஏப்ரல் 2024: குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு மற்றும் முதல் நவராத்திரி காரணமாக பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
10 ஏப்ரல் 2024: ஈத் காரணமாக கொச்சி மற்றும் கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
11 ஏப்ரல் 2024: ஈத் பண்டிகை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
13 ஏப்ரல் 2024: இரண்டாவது சனிக்கிழமையன்று வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
14 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
15 ஏப்ரல் 2024: ஹிமாச்சல் தினத்தையொட்டி கவுகாத்தி மற்றும் சிம்லா மண்டலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
17 ஏப்ரல் 2024: ஸ்ரீராம நவமியை முன்னிட்டு அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
20 ஏப்ரல் 2024: கரியா பூஜை காரணமாக அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
21 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
27 ஏப்ரல் 2024: நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை.
28 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை.
மேலும் படிக்க | சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைவு: சென்னை சிலிண்டரின் விலை எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ