Bank Holidays: செப்டம்பர் மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!

Bank Holidays In September: செப்டம்பரில் ஆகஸ்ட் மாதத்தைப் போலவே வங்கிகள் பல நாட்களுக்கு மூடப்பட உள்ளன. செப்டம்பரில் வங்கி தொடர்பான முக்கியமான வேலைகள் ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 11:17 AM IST
  • செப்டம்பரில் ஞாயிறு தவிர மற்ற விடுமுறை நாட்களுக்கான விடுமுறை விவரத்தை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
  • இது தவிர, செப்டம்பர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு பங்குச் சந்தையிலும் வர்த்தகம் இருக்காது.
  • செப்டம்பரில் விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ
Bank Holidays: செப்டம்பர் மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!! title=

புது டெல்லி: வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!! செப்டம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சில வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படும். ​​மற்ற சில உள்ளூர் விடுமுறைகளாக இருக்கும். இந்த பண்டிகைகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதத்தில் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு முன், வங்கிகள் மூடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்களின் பட்டியலைக் குறித்துக்கொள்வது நல்லதாகும். 

 செப்டம்பர் 2022 மாதத்தில் வங்கிகளில் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கப்போகும் நாட்களின் விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. எனினும், ஆன்லைன் வங்கிச் செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படும்.  

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர் பட்டியலின்படி செப்டம்பர் மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 8 நாட்கள் ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் கீழ் வருகின்றன. மீதமுள்ள நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும். இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் அல்லது பிராந்தியங்களிலும் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படாது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் அரசால் கடைபிடிக்கப்படும் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் மொத்த நாட்களின் எண்ணிக்கை இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

எடுத்துக்காட்டாக, கொச்சியில் திருவோணத்திற்காக வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த நாளில் வங்கிகள் மூடப்படாது.

மேலும் படிக்க | மக்கள் ஹேப்பி..பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு 

இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறை நாட்களை மூன்று பிரிவுகளில் வைக்கிறது:
- நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்டின் கீழ் வரும் விடுமுறைகள்
-  நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்ட் மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் விடுமுறைகள் மற்றும்
- பாங்க்ஸ் குளோசிங் ஆஃப் அகவுண்ட்ஸ் 

இருப்பினும், வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் என்பதையும் அனைத்து விடுமுறைகளும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பைப் பொறுத்தது.

செப்டம்பர் 2022 மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் இதோ:

செப்டம்பர் 1 - விநாயக சதுர்த்தி (2வது நாள்) (சில இடங்களில் மட்டும்)
செப்டம்பர் 6 - கர்ம பூஜை (சில இடங்களில் மட்டும்)
7 மற்றும் 8 செப்டம்பர் - ஓணம் (சில இடங்களில் மட்டும்)
செப்டம்பர் 9 - இந்திரஜாதா (சில இடங்களில் மட்டும்)
செப்டம்பர் 10 - ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி / 2வது சனிக்கிழமை
செப்டம்பர் 21- ஸ்ரீ நாராயண குரு சமாதி திவஸ் (சில இடங்களில் மட்டும்)
செப்டம்பர் 26- நவராத்திரி ஸ்தாபனம்

மேற்கண்ட வங்கி விடுமுறைகள் தவிர, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் பின்வரும் தேதிகளில் வருகின்றன:

செப்டம்பர் 4 - ஞாயிறு 

செப்டம்பர் 10 - இரண்டாவது சனிக்கிழமை

செப்டம்பர் 11 - ஞாயிறு

செப்டம்பர் 18 - ஞாயிறு

செப்டம்பர் 24 - நான்காவது சனிக்கிழமை 

செப்டம்பர்  25 - ஞாயிறு

அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களின்படி குறிப்பிடப்பட்ட நாட்களின் விடுமுறைகள் பல்வேறு பிராந்தியங்களில் அனுசரிக்கப்படும், இருப்பினும் வர்த்தமானி விடுமுறை நாட்களில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

இந்த விடுமுறை நாட்களின் பட்டியலை நீங்கள் நினைவில் கொண்டால், வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும். நீண்ட வார இறுதிகளில், உங்கள் விடுமுறை நாட்களையும் நன்றாக திட்டமிடலாம்.

மேலும் படிக்க | உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News