Indian Railways ஜாக்பாட் செய்தி: உங்கள் டிக்கெட்டில் இனி மற்றொருவர் பயணிக்கலாம்

Indian Railways: ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2023, 02:51 PM IST
  • பயணிகளுக்கு சிறப்பு வசதிகள்.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் மாற்றம்.
  • எத்தனை நேரத்துக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்?
Indian Railways ஜாக்பாட் செய்தி: உங்கள் டிக்கெட்டில் இனி மற்றொருவர் பயணிக்கலாம் title=

இந்திய ரயில்வே: ரயில் பயணம் செய்யும் பயணிகள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை உள்ளது. சில சமயம் நம்மிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் இருக்காது, ஆனால், நம் குடும்பத்தைச் சேர்ந்த வேறு சிலரிடம் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் இருக்கும். அவர்களால் பயணம் செய்ய முடியாத சூழ்நிலையும், நமக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அல்லது கடைசி நேரத்தில் பயணிக்கும் நபரில் மாற்றம் ஏற்படலாம். ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது. 

இது இரண்டு நன்மைகளைக் கொண்டிருக்கும். ஒன்று, ஒருவர் மற்றொருவரது டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும், மற்றொன்று, டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கான கட்டணத்தையும் நாம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான சிறப்பு வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பயணிகளுக்கு சிறப்பு வசதிகள்

ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின் பயணிக்க முடியாமல் தவிக்கும் ரயில் பயணிகள், அந்த பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு, தனக்கு பதிலாக பயணிக்கும் நபருக்கு புதிதாக டிக்கெட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், இந்த சந்தர்ப்பங்களில் உறுதியான (கன்ஃபர்ம்) டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். இதன் காரணமாகத்தான் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் மக்களுக்கு இது பற்றி மிகவும் குறைவாகவே தெரியும். ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இங்கே காணலாம். 

குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் மாற்றம்

ஒரு பயணி தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்பத்தில் உள்ள வேறு எந்த உறுப்பினரின் பெயரிலும் மாற்றலாம். இதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் எடுக்கப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் போடப்படுகிறது.

எத்தனை நேரத்துக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? 

பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது அலுவலக பணிக்காக செல்கிறார் என்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் இந்த கோரிக்கையை விடுக்கலாம். பின்னர் இந்த டிக்கெட் கோரப்பட்ட நபரின் பெயருக்கு மாற்றப்படும். திருமணத்திற்கு செல்பவர்கள் முன் இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி, முழு விவரம் இதோ

ஒரே ஒரு முறை மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்

பயணச்சீட்டுகளை மாற்றுவது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே கூறுகிறது, அதாவது, ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறொருவருக்கு மாற்றியிருந்தால், அதை அவர் மீண்டும் மாற்ற முடியாது, அதாவது இப்போது இந்த டிக்கெட்டை மற்றொரு முறை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. 

ரயில் டிக்கெட்டை எப்படி மாற்றுவது?

- டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

- அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்குச் செல்லவும்.

- யாருடைய பெயருக்கு டிக்கெட் மாற்றப்பட வேண்டுமோ, அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.

- கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க | ரயில்வேயின் ‘இந்த’ வழித்தடத்தில் டிக்கெட்டே தேவையில்லை... TTR-க்கும் வேலையில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News