மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி, முழு விவரம் இதோ

Indian Railways Update: நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இனி நீங்கள் கட்டண சலுகையின் பலனைப் பெறுவீர்கள். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2023, 09:15 AM IST
  • மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சீனியர் சிட்டிசன் சலுகை.
  • ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை.
  • மூத்த குடிமக்கள் என்ன சலுகைகள் கிடைக்கும்.
மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, ரயில் கட்டணத்தில் தள்ளுபடி, முழு விவரம் இதோ title=

மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் சலுகை வழங்கல்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், தற்போது கட்டண (Train Ticket Concession For Senior Citizen) சலுகையின் பலனைப் பெறுவீர்கள். முன்னதாக மூத்த குடிமக்களுக்குக் கட்டணச் சலுகையை ரயில்வே நிர்வாகம் அளித்து வந்தது, அதை தற்போது திரும்பப் பெற வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் ரயில் கட்டண சலுகையின் பலனை மூத்த குடிமக்கள் பெறுவார்கள் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

பலருக்கு சலுகை கிடைத்தது
திவ்யாங் மற்றும் நோயாளிகளுடன், மாணவர்களுக்கும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் கொரோனாவுக்கு முன் சலுகையைப் பெற்று வந்தனர், ஆனால் இப்போது அந்த கட்டண சலுகையும் இந்தியன் ரயில்வேவால் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக கோரிக்கை நாடாளுமன்றத்தில் சமீப காலமாக வைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Gold rules: இனி தங்க நகைகளை விற்க முடியாது! அமலுக்கு வந்தது புதிய விதிகள்!

இவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் தள்ளுபடி கிடைக்கும்
விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், தியாகிகளின் மனைவி மற்றும் விருது பெற்றவர்களும் ரயில்வேயின் ரயில் சலுகைகளின் பலனைப் பெறுகிறார்கள். இது தவிர, மாணவர்கள் மற்றும் நோயாளிகள் ரயிலில் பல வகையான தள்ளுபடிகளையும் பெறுகிறார்கள். மறுபுறம் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இது மீண்டும் வரும் காலங்களில் தொடங்கப்படலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு சலுகை
MST முதல் பட்டப்படிப்பு வரை பெண்கள் இரண்டாம் வகுப்பில் இலவசமாகப் பயணம் செய்ய ரயில்வே அனுமதிக்கிறது. மறுபுறம், சிறுவர்கள் MST முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் கீழ், மதரஸாவின் குழந்தைகளும் அடங்குவர். இது தவிர, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும்.

முன்பு தள்ளுபடி வழங்கப்பட்டது
மார்ச் 2020க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் (Train Ticket Concession For Senior Citizen) அனைத்து வகுப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும், ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் ரயில்வே துறை வழங்கி வந்தது. ரயில்வேயில் இருந்து இந்த விலக்கு பெற வயதான பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 58 ஆகவும், ஆண்களுக்கு 60 ஆகவும் இருந்தது, ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு, இந்த சலுகை கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே மூத்த குடிமக்களுக்கான பயண விதிகளில் ரயில்வே மாற்றம் செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சார்பில் பெரிய பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்களுக்காக ரயில்வே பல புதிய விதிகளை உருவாக்கி வருகின்றது. இருப்பினும் கட்டணம் சலுகை குறித்து அறிவிப்புக்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | LIC: எல்ஐசியின் மகத்தான பாலிசி... முதிர்வடையும் போது ரூ. 91 லட்சம் கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News