ரயில்கள் நீண்ட தூரம் பயணிக்க கட்டணம் குறைவாக உள்ள போக்குவரத்தாக இருப்பதோடு மற்றும் மிகவும் வசதியான போக்குவரத்து வழியாகக் கருதப்படுகின்றன. இந்தியா தனது இரயில் வலையமைப்பை தொடர்ந்து விரிவு படுத்திக் கொண்டே வருகிறது. தற்போது இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடாக மாறியுள்ளது. இந்திய இரயில்வே பற்றிய பல தனித்துவமான ஆச்சர்யமான, பலர் அரியாத தகவல்கள் உள்ளன. இதனை அறிந்து கொண்டால் இந்திய நாட்டவர் அனைவரும் அவற்றைப் பற்றி நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்று நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போவது அத்தகைய ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. டிக்கெட் பரிசோதகருக்கும் வேலையில்லை.
இந்தியாவின் தனித்துவமான ரயில் வழித்தடம்
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்! இந்தியாவில் ஒரு ரயில்வேயின் ஒரு வழித்தடத்தில், பயணம் செய்வதற்கு கட்டணமாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்படுவதில்லை. பக்ரா-நாங்கல் அணையைப் பார்க்க வரும் பயணிகளுக்காக இந்த ரயில் பிரத்யேகமாக இயக்கப்படுகிறது. பக்ராவிலிருந்து நங்கல் வரை செல்லும் இந்த ரயில் ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் எல்லைக்கு அருகில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த ரயிலின் பெட்டிகள் இன்றும் மரத்தால் ஆனவை. இதில் நீங்கள் TTE எவரையும் காண முடியாது. இந்தந் வழித்தடத்தில் அணுக முடியாத, மிகவும் கடுமையான மலைகளை வெட்டி பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. ரயிலின் பராமரிப்பு மற்றும் இயக்க பொறுப்பு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திடம் உள்ளது.
மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!
கட்டணம் வசூலிக்கப்படாததன் காரணம்
குறிப்பிட்ட இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் ஏன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்க கூடும். இந்திய அரசு இந்த ரயிலை நாட்டின் பாரம்பரிய பெருமையாக கருதுகிறது. 1949 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலை இயக்க டீசல் என்ஜின்கள் தான இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரயிலை இயக்க சுமார் 50 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றும் உயிருடன் இருக்கும் விலைமதிப்பற்ற பாரம்பரியம்
ஒரு காலத்தில் 10 பெட்டிகள் இருந்த இந்த ரயிலில் தற்போது மூன்று பெட்டிகள் மட்டுமே உள்ளது. இதில், ஒரு போகி சுற்றுலா பயணிகளுக்காகவும், மற்றொரு போகி பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பக்ரா-நங்கல் அணையைக் கட்ட பழைய தலைமுறையினர் மிகவும் போராட வேண்டியிருந்தது. இதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். இந்த வகையிலும், பக்ரா-நங்கல் ரயிலை பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாத்து, அதில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து இன்றும், ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்படுவதில்லை.
பாரம்பரியமிக்க பாகர்-நங்கல் ரயில் ஷிவாலிக் மலைகள் வழியாக 13 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் எல்லையில் உள்ள பக்ரா மற்றும் நங்கல் இடையே சட்லஜ் நதி நீரை தேக்கி வைப்பதற்காக பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டது. அணை கட்டும் போது இந்த இரண்டு இடங்களுக்கு இடையே மக்கள் செல்லக்கூடிய சரியான பாதை இல்லை என்பதால், கனரக இயந்திரங்கள் மற்றும் மக்கள் செல்வதற்கு வசதியாக, ஒரு சிறப்பு ரயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பக்ரா-நங்கல் ரயில் சேவை 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. தொடக்கத்தில், இந்த ரயில் நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்டது.
தினமும் சுமார் 300 பேர் பக்ரா நங்கல் இலவச ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் இருபத்தைந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த இலவச ரயில் சேவை பல மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்ற முடியுமா.. விதிகள் கூறுவது என்ன...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ