Cheap Flight Tickets: தீபாவளியில் பம்பர் சலுகை, வெறும் ரூ.1499-க்கு விமான டிக்கெட்

Cheap Flight Tickets: இந்த பண்டிகைக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்யும் திட்டம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 19, 2022, 01:40 PM IST
  • விஸ்தாரா விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது.
  • விஸ்தாரா பண்டிகை விற்பனையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
  • இந்த விற்பனையானது எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிசினஸ் ஆகிய மூன்று பயண வகுப்புகளுக்கும் ஆகும்.
Cheap Flight Tickets: தீபாவளியில் பம்பர் சலுகை, வெறும் ரூ.1499-க்கு விமான டிக்கெட் title=

மலிவான விமான டிக்கெட்டுகள்: இந்த பண்டிகைக் காலத்தில் விமானத்தில் பயணம் செய்யும் திட்டம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். விஸ்தாரா ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மலிவான விமான டிக்கெட்டுகளை பெற முடியும். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இந்த வசதியை விஸ்தாரா நிறுவனம் தொடங்கியுள்ளது.

நிறுவனம் விற்பனையைத் தொடங்கியது

விஸ்தாரா விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. விஸ்தாரா பண்டிகை விற்பனையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிசினஸ் ஆகிய மூன்று பயண வகுப்புகளுக்கும் ஆகும். ஆகையால், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

விற்பனை எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்?

நிறுவனம் அனைத்து உள்நாட்டுத் தளங்களுக்கும் (டொமஸ்டிக் செக்டர்) இந்த விற்பனையைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இந்த விற்பனை அக்டோபர் 17 முதல் தொடங்கியது. இது அக்டோபர் 19 வரை நடைபெறும். அதாவது, உள்நாட்டு டிக்கெட்டுகளை வாங்க விரும்பும் பயணிகளுக்கு இன்று கடைசி நாள். அதே நேரத்தில், நீங்கள் அக்டோபர் 20 வரை சர்வதேச டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

மேலும் படிக்க |  Post Office Scheme: வேகமாக பணம் இரட்டிப்பாகும், ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டம் 

மார்ச் 31 வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் 23 அக்டோபர் 2022 முதல் 31 மார்ச் 2023 வரையிலான கால அளவில் பயணம் செய்ய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிக்கெட் புக்கிங்கில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்

இந்த விற்பனையில் கிடைக்கும் டிக்கெட் கட்டணங்களின் விவரம் பின்வருமாறு:

- எகானமி வகுப்பில் ஒரு வழி உள்நாட்டு விமான பயண டிக்கெட்டை ரூ.1499 க்கு புக் செய்யலாம். 

- பிரீமியம் எகானமி வகுப்பில் ரூ.2999க்கும், பிசினஸ் வகுப்பில் ரூ.8999க்கும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

காத்மாண்டுவிற்கான கட்டணம் எவ்வளவு?

இது தவிர, டெல்லியில் இருந்து காத்மாண்டு செல்லும் வாடிக்கையாளர்கள் எகானமி வகுப்புக்கு ரூ.14,149-லும், பிரீமியம் வகுப்பிற்கு ரூ.18,499-லும், வணிக வகுப்பிற்கு ரூ.42,499-லும்  டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News