இந்த 5 தவறுகள் உங்கள் CIBIL ஸ்கோரை பாதிக்கும்! ஜாக்கிரதை!

CIBIL Score Check: வயது மற்றும் மாத வருமானம் உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை பாதிக்கும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கு உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2023, 09:41 AM IST
  • கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரி.
  • கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரை உருவாக்க ஒரு சிறந்த வழியாகும்.
  • பழைய கிரெடிட் கணக்குகளை பயன்படுத்தாவிட்டால் அவற்றை கிளோஸ் செய்வது நல்ல யோசனை,
இந்த 5 தவறுகள் உங்கள் CIBIL ஸ்கோரை பாதிக்கும்! ஜாக்கிரதை!  title=

CIBIL Score Check: வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களது சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோரை கண்காணித்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் நமக்கு கடன் உடனடியாக கிடைக்கும்.  அனைவருக்குமே பண தேவை என்பது இருந்துகொண்டு தான் இருக்கும், சிறிய தேவைகள் மற்றும் பெரிய தேவைகள் என தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கடன் உதவிகளை பெறுகின்றனர்.  உதாரணத்திற்கு வீடு வாங்குவது, கார் வாங்குவது, குழந்தைகளின் படிப்புக்கு பணம் என பல அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் கடன் வாங்குகின்றனர்.  கடன் உதவிகள் பெறுவதன் மூலம் நாம் நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்க வேண்டிய தேவையில்லை, உடனடியாக நமக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.  உங்கள் வயது மற்றும் மாத வருமானம் உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை பாதிக்கும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கு உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.

மேலும் படிக்க | PAN Aadhaar Link: இவர்கள் பான் - ஆதார் கார்டை இணைக்க தேவையில்லை!

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்க கடன் வழங்குபவர்கள் சரிபார்க்கும் முக்கியமான காரணி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் உள்ளது, இதில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கி விடுவார்.  அதேசமயம் குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் ஆபத்துகள் அதிகம், அவர்களுக்கு கடன் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கப்பெறாது.  ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை 750 அல்லது அதற்கு மேல் வைத்திருப்பது, கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதங்களைப் பெற உதவுகிறது.  சில சமயங்களில் நீங்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் கிரெடிட் ஸ்கோர் குறையும் அபாயம் உள்ளது.  இப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் சில விஷயங்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

1) உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் பேமெண்ட் ஹிஸ்டரி ஆகும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தோராயமாக 35% ஆகும்.  உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டுமானால் தவணை தொகையை தாமதமாக செலுத்துவது அல்லது கடனை சரியாக செலுத்தாமல் இருப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.  உங்கள் மாதாந்திர நிலுவைத் தொகை, குறைந்தபட்ச தொகையாக இருந்தாலும், சரியான நேரத்தில் செலுத்துவது மிகவும் முக்கியமானது. நீங்கள் சரியான நேரத்தில் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  பணம் செலுத்துவதில் நீங்கள் சிரமப்பட்டால், கட்டணத் திட்டங்கள் போன்ற விருப்பங்களை ஆராய உங்கள் கடன் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

2) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரை உருவாக்க ஒரு சிறந்த வழியாகும், ஆனால் அவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகளை அதிகப்படுத்துவது அல்லது உங்களுக்குக் கிடைக்கும் கிரெடிட்டில் 30%க்கும் அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.  உங்கள் கடன் நிலுவைகளை குறைவாக வைத்து, ஒவ்வொரு மாதமும் உங்கள் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துவதன் மூலம் பாதிப்பு ஏதும் வராமல் பார்த்து கொள்ளலாம்.  நீங்கள் பல கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தாலும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது.

3) ஒவ்வொரு முறையும் நீங்கள் கிரெடிட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​உங்கள் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு கடன் வழங்குபவர் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை பார்ப்பார்.  இது உங்கள் அறிக்கையில் 2 ஆண்டுகள் வரை இருக்கும், குறுகிய காலத்திற்குள் பல கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.  இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படலாம் மற்றும் தேவையில்லாமல் கிரெடிட் கார்டுகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.  

4) பழைய கிரெடிட் கணக்குகளை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் அவற்றை மூடுவது நல்ல யோசனை,  இருப்பினும் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைத்துவிடும்.  உங்கள் கிரெடிட் ஸ்கோரில் 15% உங்கள் கடன் ஹிஸ்டரியை பொறுத்தது, உங்கள் கடன் ஹிஸ்டரி எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு சிறப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் இருக்கும்.  எனவே, பழைய கணக்குகளை மூடுவதற்குப் பதிலாக, நீண்ட கிரெடிட் ஹிஸ்டரியை கொண்டிருப்பது சிறந்த முறையில் சிபில் ஸ்கோரை பராமரிக்க உதவும்.

5) கிரெடிட் ரிப்போர்ட் என்பது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் பதிவாகும், இதில் உங்கள் சிபில் ஸ்கோரைக் கணக்கிடும் அனைத்து தகவல்களும் உள்ளன.  எனவே, தகவல் துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் கடன் அறிக்கையை தவறாமல் மதிப்பாய்வு செய்வது அவசியம்.  உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதேனும் பிழைகள், தவறுகள் அல்லது மோசடி செயல்பாடுகள் இருந்தால் உங்கள் சிபில் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | ஆதார் - பான் இல்லாமல் நீங்கள் இனி பணத்தை சேமிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News