Keerthy Suresh Antony Thattil Age Difference : கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவின் மட்டுமன்றி வட இந்தியாவிலும் வைரலாக இருந்தார். காரணம், தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த ப்ரமோஷன் விழாவில் தனது திருமண வாழ்க்கை குறித்தும் கணவர் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இணையத்தில் வைரலாக இருக்கிறது.
காதலரை கரம் பிடித்த கீர்த்தி!
2024-ல் திருமணம் முடித்த செலிப்ரிட்டிகளுள் ஒருவர், நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது திருமணம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடைப்பெற்றது. இதில் இவரது நெருங்கிய உறவினர்களும், திரையுலக நண்பர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக விஜய், த்ரிஷா, அட்லீ, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம், முதலில் தமிழ் முறைப்படி நடக்க, பின்பு கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இந்த திருமண அறிவிப்பு வெளியாகும் வரை, பெரும்பாலானோருக்கு கீர்த்தி சுரேஷ் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயமே தெரியாது. இவரது திருமண அறிவிப்பு பலருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
கீர்த்தி, ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காதல் உறவில் இருந்து, பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் கீர்த்தி மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது, வயது வித்தியாசத்தையும் கூறியிருக்கிறார்.
வயது வித்தியாசம் என்ன?
நடிகர்-நடிகைகள் பலர் மிகப்பெரிய வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், கீர்த்திக்கும் ஆண்டனிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் குறித்தும் ஒரு சுவாரஸ்ய தகவலை கீர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
கீர்த்தி, 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதே ஆண்டனியை டேட்டிங் செய்ய தொடங்கி விட்டாராம். அதன் பிறகு வேலைக்காக ஆண்டனி துபாய் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு செல்ல இருவரும் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் (தொலைதூர காதல்) இருந்திருக்கின்றனர். கிட்டத்தடட 6 முதல் 7 வருடங்கள் இப்படியே இவர்களின் காதல் இப்படியே தொடர்ந்ததாகவும், இதில் சில இன்னல்களை இருவரும் அவ்வப்போது சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார். கூடவே, ஆண்டனி தன்னை விட 7 வயது பெரியவர் என்ற விவரத்தையும் கீர்த்தி தெரிவித்திருக்கிறார்.
ஓடிப்போக நினைத்த கீர்த்தி..
நடிகை கீர்த்தி மிக இளம் வயதிலேயே ஆண்டனியை காதலிக்க தொடங்கினார் என்பது அவரது நேர்காணல் மூலம் அனைவருக்கும் தெரிய வந்ததது. இது குறித்து மேலும் பேசிய கீர்த்தி, தானும் ஆண்டனியும் பலமுறை ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது போல கெட்ட கணவுகள் வந்திருந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனால், தனது திருமணம் தனக்கு ஒரு கனவு போல தாேன்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கீர்த்திக்கு கை கொடுக்குமா பாலிவுட்?
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார். பேபி ஜான் படம் ஹிட் ஆகி பாலிவுட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சனங்களில் சறுக்கியிருக்கிறது. இந்த நிலையில், பாலிவுட்டிற்குள் நுழைந்த கீர்த்திக்கு, இப்படி முதல் படமே தோல்வியாகி விட்டதே என ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷின் காதலன் இப்படிப்பட்ட ஆளா? முழு விவரத்தை இங்கே தெரிஞ்சிக்கோங்க..
மேலும் படிக்க | 2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ