புதுடெல்லி: ஈக்விட்டி (Equity) பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் திங்களன்று தொடக்க நேரத்தில் 2,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் காரணமாக மேற்கொள்ளப்படும் "லாக்-டவுன்" உத்தரவுக்கு மத்தியில் உலகளாவிய பங்குகள் மீண்டும் கடும் வீழ்ச்சியுடம் தொடங்கியதால், முதலீட்டார்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதபோல இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு எதிராக 92 பைசா சரிந்து 76.12 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் (Crude Oil) விலை 3 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு 26.17 அமெரிக்க டாலராக இருந்தது.
2,718 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைத்த பின்னர், பிஎஸ்இ (BSE) பங்குசந்தை 8.12 சதவீதம் குறைந்து 27,485.39 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
இதேபோல், என்எஸ்இ நிஃப்டி (NSE Nifty) சுமார் 682.35 புள்ளிகள் அல்லது 7.80 சதவீதம் சரிந்து 8,063.10 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
அனைத்து சென்செக்ஸ் குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன, பஜாஜ் ஃபைனான்ஸ் 14 சதவீதம் வரை உயர்ந்தது, அதன்பிறகு ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, மாருதி மற்றும் எம் அண்ட் எம் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் சற்று உயர்ந்தன.
முந்தைய முந்தைய அமர்வில், பங்குச் சந்தைகள் நான்கு நாட்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், அதனுடன் ஒப்பிடும் போது, இன்று கொஞ்சம் ஆறுதல் தந்தது. பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,627.73 புள்ளிகள் அல்லது 5.75 சதவீதம் அதிகரித்து 29,915.96 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 482 புள்ளிகள் அல்லது 5.83 சதவீதம் அதிகரித்து 8,745.45 ஆக முடிவடைந்தது.
கடந்த வர்த்தக வாரத்தில் வெள்ளிக்கிழமை வரை, சென்செக்ஸ் 4,187.52 புள்ளிகள் அல்லது 12.27 சதவீதம் சரிந்தது, நிஃப்டி 1,209.75 புள்ளிகள் அல்லது 12.15 சதவீதம் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது