தூக்கியெறியும் தேங்காய் மூடியில் வருமானம்!

தூக்கியெறியும் தேங்காய் மூடியில் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. உங்களால் அதில் தினசரி வருமானம் ஈட்ட முடியும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 14, 2022, 05:33 PM IST
  • ஆன்லைனில் விற்பனையாகும் தேங்காய் மூடிகள்
  • எளிமையாக வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்
  • அமேசான் மூலம் தேங்காய் மூடிகளை விற்பனை செய்யலாம்
தூக்கியெறியும் தேங்காய் மூடியில் வருமானம்!  title=

வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் மூடிகளை எளிதாக தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால், அந்த மூடிகள் மூலம் உங்களுக்கான வருமானத்தை ஈட்ட முடியும் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. நாம் தேவையில்லை என நினைக்கும் பொருள், யாரோ ஒருவருக்கு தேவையான பொருள் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த தேவையானவர்களை கண்டுபிடிப்பது எப்படி? என நீங்கள் யோசிக்கலாம்.

மேலும் படிக்க | யூடியூபில் வைரல் ஆகா வேண்டுமா? இத பண்ணா போதும்!

அதில் தான் வணிக சூட்சம் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கான ஃபார்முலாவை கண்டுபிடித்தவர்கள் அந்த பொருளை விற்பனை செய்து கோடிகளில் இல்லையென்றாலும், தினசரி வருமானத்தையாவது ஈட்டி வருகின்றனர். அவற்றைப்போலவே, தூக்கியெறியும் தேங்காய் மூடிகளிலும் உங்களுக்கான வருமானம் இருக்கிறது. பல வெளியாட்டு ஆன்லைன் தளங்களில் அரைமூடி தேங்காய் மூடி 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய் மூடி பயன்பாடு

தேங்காய் மூடியில் என்ன செய்ய முடியும்? என கேட்கிறீர்களா. இதில் இருக்கும் மறைபொருள் வணிகத்தை தெரிந்து கொள்ளுங்கள். தேங்காய் மூடிகளை சேமித்து விறகு அடுப்புகளுக்கு பயன்படுத்தினால் கேஸ் பயன்பாடு மற்றும் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு குறையும். இதனால் வீட்டில் மின்சாரக்கட்டணம் கணிசமாக குறையும்.

மேலும் படிக்க | YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!

தேங்காய் மூடியில் கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன. கிண்ணங்கள், அழகு சாதனப் பொருட்கள் செய்ய இவை பயன்படுவதால், ஆன்லைன் தளங்களில் இதற்கான டிமாண்ட் உள்ளது. பிரபல வணிக தளங்களான அமேசானில் கூடதேங்காயின் அரைமூடி 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால், அந்த தேங்காய் மூடிகளின் விலைக்கும் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ஷெல் பொருட்கள் உருவாக்கவும் தேங்காய் மூடிகள் பயன்படுவதால், நாளுக்கு நாள் தேங்காய் மூடிகளின் தேவை அதிகரித்து வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News