ஜூலை மாதத்தில் அமலாக உள்ள புதிய விதிகள்... முழு விபரம் இதோ..!!

New Rules from 1st of July 2024: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாளை  ஜூலை  மாதம் பிறக்க உள்ள நிலையில், பல விதிகள் மாறுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2024, 02:12 PM IST
  • எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது.
  • ஜியோ ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD திட்டத்தை வழங்குகிறது.
ஜூலை மாதத்தில் அமலாக உள்ள புதிய விதிகள்... முழு விபரம் இதோ..!! title=

New Rules from 1st of July 2024: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாளை  ஜூலை  மாதம் பிறக்க உள்ள நிலையில், பல விதிகள் மாறுகின்றன. ஜூலை 1 முதல் எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலை அதிகரிக்கலாம். ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை ஏற்கனவே உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும். நீங்கள் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த மாத இறுதிக்குள் அதைச் செய்ய வாய்ப்பு. இதைத் தவிர ரிசர்வ் வங்கி புதிய விதிகள் கிரெடிட் கார்டு  விதிகளையும் அமல்படுத்துகிறது 

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி வணிக ரீயிலான சிலிண்டர் விலையை அரசு குறைத்திருந்தது. இந்த முறை அரசாங்கம் விலையை கூட்டுமா அல்லது குறைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது தவிர, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி முதலீட்டு திட்டம்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD திட்டத்தை (Investment Tips) வழங்குகிறது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 300 மற்றும் 400 நாட்களுக்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. இந்தியன் வங்கியின் இணையதளத்தில் வெளியான தகவலில், 2024 ஜூன் 30ம் தேதி 2024 வரை Ind Super 400 Days மற்றும் Ind Supreme 300 Days FD திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த சிறப்பு FD என்பது காலபிள் FD ஆகும். Callable FD என்பது இதில் நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் எடுக்கலாம் என்பதாகும்.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD திட்டம்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு FDக்கு அதிகபட்சமாக 8.05 சதவீதம் வட்டி கிடைக்கும். வங்கியின் இணையதளத்தின்படி, வங்கி 222 நாட்களுக்கான FDக்கு 7.05 சதவீத வட்டியையும், 333 நாட்களுக்கான FDக்கு 7.10 சதவீதத்தையும், 444 நாட்களின் FDக்கு 7.25 சதவீதத்தையும் வழங்குகிறது. சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 444 நாட்கள் FDக்கு 8.05 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.

மேலும் படிக்க | ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும்

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான புதிய விதிகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் காரணமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் சில மாற்றங்கள் இருக்கும். அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) மூலம் செலுத்தப்பட வேண்டிய இந்த உத்தரவு, PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues போன்ற முக்கிய ஃபின்டெக் தளங்களை பாதிக்கும். ஜூலை 1 முதல், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் BBPS மூலம் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதுவரை, கிரெடிட் கார்டுகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட 34 வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே BBPS மூலம் கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்தியுள்ளன.

ஜூலை மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஜூலையில் 13 நாட்களுக்கு வங்கி மூடப்பட உள்ளது. இதில், ஞாயிறுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் காரணமாக 6 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாக ஜூலை மாதத்தில் மீதமுள்ள 7 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். குரு ஹர்கோவிந்த் ஜி ஜெயந்தி மற்றும் முஹர்ரம் காரணமாக ஜூலை மாதம் விடுமுறை அளிக்கப்படும். ஜூலை மாதத்தில் இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

ஜியோ ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள் ஜூலை 3 முதல் அதிகரிக்கின்றன . புதிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டண பட்டியலை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களும் 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

மேலும் படிக்க | அம்மாடி...! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News