BSNL வழங்கிய அசத்தல் செய்தி! 89,047 கோடி அரசு முதலீடு, விரைவில் 5G சேவை

பிஎஸ்என்எல், முந்தைய அறிக்கையின்படி, ஏற்கனவே திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய 25,000 கிராமங்களுக்கு 4G கவரேஜை வழங்குவதே இதன் நோக்கமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், பி எஸ் என் எல் புத்துயிர் பெறும் என கூறப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2023, 06:31 PM IST
  • பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அடித்த ஜாக்பாட்.
  • இனி 4G,5G சேவை கிடைக்கும்.
  • பிஎஸ்என்எல் க்கு ரூ. 89,047 கோடி நிதி ஒதுக்கீடு
BSNL வழங்கிய அசத்தல் செய்தி! 89,047 கோடி அரசு முதலீடு, விரைவில் 5G சேவை title=

மோடி அமைச்சரவைக் கூட்டம்: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரத்தின் ஒதுக்கீட்டின் மூலம் புத்துயிர் அளிக்க ரூ.89,047 கோடி மதிப்பிலான மறுமலர்ச்சி பேக்கேஜுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது மறுமலர்ச்சி பேக்கேஜுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.89,047 கோடியை அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு அறிக்கை வெளியிட்டது
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்ய இந்த பேக்கேஜ் பயன்படுத்தப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பேக்கேஜைப் பெற்ற பிறகு, பிஎஸ்என்எல் இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்

ரூ.46,338.6 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
இந்த பேக்கேஜின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.46,338.6 கோடி மதிப்பிலான 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரமும், ரூ.26,184.2 கோடி மதிப்பிலான 3300 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமும், ரூ.6,564.93 கோடி மதிப்பில் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமும், ரூ.9,428.2 கோடி மதிப்பிலான 2500 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கப்படும். இது தவிர, பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.531.89 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5ஜி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
இந்த பேக்கேஜின் மூலம், தொலைத்தொடர்பு துறையில் கடும் போட்டிக்கு ஏற்ற வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேக்கேஜ் கிடைத்த பிறகு, பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க முடியும். தற்போது அதிவேக தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்காததால் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர் தளத்தை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு புதுப்பிக்கும்
இதற்கிடையில் சிக்கலில் உள்ள பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு புத்துயிர் அளிக்க அரசு ஏற்கனவே நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளது. முதல் மறுமலர்ச்சி பேக்கேஜ் கடந்த 2019 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கு கூட்டாக 69,000 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பேக்கேஜ் கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, இதன் கீழ் ரூ 1.64 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

இதனிடையே மத்திய அரசு பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்தன. மேலும் கடனில் மூழ்கியிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுமட்டும் இல்லாமல் MTNL நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் செயல்பாடுகளை BSNL க்கு மாற்றும் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. 

பிஎஸ்என்எல், முந்தைய அறிக்கையின்படி, ஏற்கனவே திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய 25,000 கிராமங்களுக்கு 4G கவரேஜை வழங்குவதே இதன் நோக்கமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், பி எஸ் என் எல் புத்துயிர் பெறும் என கூறப்படுகிறது.\

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியத் திட்டம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News