மத்திய அமைச்சரவையில் விவசாயிகளுக்கான 7 முக்கிய அறிவிப்புகள், ரூ.13966 கோடிக்கு ஒப்புதல்

Union Cabinet: மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 3, 2024, 02:20 PM IST
  • டிஜிட்டல் வேளாண்மை திட்டம்.
  • வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்.
  • தோட்டக்கலைத் துறையின் நிலையான வளர்ச்சி.
மத்திய அமைச்சரவையில் விவசாயிகளுக்கான 7 முக்கிய அறிவிப்புகள், ரூ.13966 கோடிக்கு ஒப்புதல் title=

Union Cabinet: இந்திய விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயம் தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நாடு முழுவதும் உணவு பாதுகாப்பை அதிகரிக்கவும் ஏழு முக்கியமான முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
- அரசின் இந்த முடிவு குறித்து தகவல் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விவசாயத் துறையை ஆதரிப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள்

டிஜிட்டல் வேளாண்மை திட்டம் (Digital Agriculture Mission): 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய தகவல்களை அளித்த அஷ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் விவசாய திட்டம்தான் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என்று கூறினார். “விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில் இது உருவாக்கப்படுகிறது. சில நல்ல பைலட் திட்டங்கள் தொடங்கப்பட்டு அவற்றில் வெற்றி கிடைத்துள்ளது. மொத்தம் ரூ.20,817 கோடி முதலீட்டில் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம் நிறுவப்படும்.” என்று கூறினார்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு சூப்பர் அப்டேட்: வருகிறது வட்டித்தொகை.... உங்கள் கணக்கில் எவ்வளவு வரும்?

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான க்ராப் சயின்ஸ் (Crop science for food and nutrition security): 

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியலை மேம்படுத்துவது இரண்டாவது முக்கியமான முடிவாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், 3979 கோடி ரூபாய் செலவில், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட விவசாயிகள் தயார்படுத்தப் படுவார்கள். 2047 ஆம் ஆண்டுக்குள் உணவுப் பாதுகாப்பு என்ற இலக்கு அடையப்படும்.

வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல் (Strengthening agricultural education, management and social science): 

வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் ரூ.2,291 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் விவசாய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பார்கள்.

நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி (Sustainable livestock health and production):

கால்நடைகள் மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்திக்கான திட்டங்களுக்காக ரூ.1,702 கோடி நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ், கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடை கல்வி மற்றும் பால் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுக்கு தேவையான ஊக்கமும் உதவியும் அளிக்கப்படும்.

தோட்டக்கலைத் துறையின் நிலையான வளர்ச்சி (Sustainable development of horticulture): 

தோட்டக்கலைத் தாவரங்கள் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க தோட்டக்கலையின் நிலையான வளர்ச்சிக்காக ரூ.860 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகள் விக்யான் மையங்களை வலுப்படுத்துதல் (Strengthening of Krishi Vigyan Kendra): 

கிருஷி அறிவியல் மையத்தை வலுப்படுத்த ரூ.1,202 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை வள மேலாண்மை (Natural resource management): 

இயற்கை வள மேலாண்மைக்கு மத்திய அரசு ரூ.1,115 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: 44% சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு எப்போது வருகிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News