மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: 44% சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு எப்போது வருகிறது?

8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் அமலுக்கு வருகின்றது. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். 

8th Pay Commission: புதிய ஊதியக்குழுவின் உருவாக்கத்தின் செயல்பாட்டின் போது, ​​தற்போதைய பொருளாதார நிலைமைகள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆணையம் பரிசீலிக்கும். இதன் பிறகு புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஊதிய கணக்கீட்டின் பல்வேறு கூறுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். 8வது ஊதியக் குழு அமலுக்கு வரும்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 -இலிருந்து 3.68 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான ஊதிய உயர்வு இருக்கும். 18 பே மேட்ரிக்ஸ் லெவல் அரசாங்க ஊழியர்களின் ஊதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண முடியும்.

1 /14

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன., அவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு அவர்களுக்கு மிக விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதம், அதாவது செப்டம்பர் மாதத்திலேயே டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 /14

மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவிற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மத்திய அரசாங்கம் எப்போது வெளியிடும் என்பது தான் அனைவரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. பல ஊழியர் சங்கங்கள் 8வது ஊதியக்குழுவை அரசாங்கம் விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

3 /14

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்கமிஷன் அமலுக்கு வருகின்றது. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வகையில் 8வது ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். புதிய ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு 1 1/2 முதல் 2 அண்டுகள் ஆகும் என்பதால், இப்போதே இதற்கான அறிவிப்பு வந்தால்தான் 2026 ஆம் ஆண்டு இதை அமலுக்கு கொண்டு வர முடியும்.

4 /14

7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 உடன் நிறைவடையும். அதற்குள் 8வது ஊதியக்குழுவின் அமலக்கத்திற்கான பணிகள் நிறைவடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம், மாத ம்பளம், அலவன்சுகள், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் என அனைத்திலும் மாற்றம் இருக்கும். 

5 /14

இருப்பினும், 8வது ஊதியக் குழுவை அமைப்பது பற்றி மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. 8வது ஊதியக் குழுவின் குறிப்பிட்ட அமலாக்கத் தேதியும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகின்றது. எனினும், சமீபத்தில் இது குறித்து பேசிய நிதிச்செயலர் டிவி சோமநாதன், 8வது ஊதியக்குழு 2016 -இல் தான் அமலுக்கு வர வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார். இதன் பிறகு சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது. 

6 /14

புதிய ஊதியக்குழுவின் உருவாக்கத்தின் செயல்பாட்டின் போது, ​​தற்போதைய பொருளாதார நிலைமைகள், ஊழியர்களின் சம்பளம் மற்றும் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆணையம் பரிசீலிக்கும். இதன் பிறகு புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஊதிய கணக்கீட்டின் பல்வேறு கூறுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். 

7 /14

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் செயல்பாடுகளைக் கணக்கிடுவதற்கான பொதுவான பெருக்கல் எண்ணாகும். எடுத்துக்காட்டாக, 2.57 என்பது தற்போதைய பொதுவான ஃபிட்மெண்ட் ஃபாக்டர். இது 6வது மத்திய ஊதியக் குழுவின் ஊதியத்தை 7வது ஊதியக் குழுவிற்கு மாற்றியமைக்கப் பயன்படுத்தப்பட்டது. 

8 /14

ஆறாவது ஊதியக் குழு 1.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைத்தது. 7வது ஊதியக் குழுவில் அனைத்து ஊழியர்களுக்குமான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உயர்த்தப்பட்டது. இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.

9 /14

6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக் குழுவுக்கு மாறியபோது, ஊழியர் சங்கம் சம்பள திருத்தத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசாங்கம் அதை 2.57 ஆகவே வைத்தது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தவிர, குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3500ல் இருந்து ரூ.9000 ஆக உயர்ந்தது. பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2.50 லட்சமாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1.25 லட்சமாகவும் மாறியது.   

10 /14

8வது ஊதியக் குழு அமலுக்கு வரும்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 -இலிருந்து 3.68 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான ஊதிய உயர்வு இருக்கும். 18 பே மேட்ரிக்ஸ் லெவல் அரசாங்க ஊழியர்களின் ஊதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண முடியும்.

11 /14

ஒரு உதாரணத்தில் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். மேட்ரிக்ஸ் லெவல் 1 இல், 7வது ஊதியக்குழுவின் கீழ், அடிப்படை சம்பளம் ரூ. 18,000, சுமார் ரூ.21,600 முதல் ரூ.27,000 வரை உயரக்கூடும். இதனால் சுமார் 44% ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.17,280 ஆக உயரக்கூடும்.

12 /14

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணத்தை அளிக்கும். 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், பிற கொடுப்பனவுகளிலும் (Allowances) மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இதனால் ஊழியர்களுக்கு அதிக அளவு சம்பள உயர்வு கிடைக்க வயப்புள்ளது. 

13 /14

8வது ஊதியக் குழுவில், அகவிலைப்படி, பயணப்படி, வீட்டு வாடகைக் கொடுப்பனவு கொடுப்பனவுகளிலும் ஏற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அலவன்ஸ்கள் மாற்றியமைக்கப்படும்.

14 /14

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.